தமிழ் - தெலுங்கு மொழிகளில் மீண்டும் வெற்றிகொடி கட்டும் என். லிங்குசாமி
பத்திரிகையாளராக இருந்து படைப்பாளி ஆனவர் லிங்குசாமி, முதல் படத்திலேயே (ஆனந்தம்) மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை இயக்கியவர். இரண்டாவது படத்தில் (ரன்) சாக்லெட் பாய் மாதவனை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியவர், மூன்றாவது படத்தில் (ஜி) அஜீத்தை அதகளம் பண்ண வைத்தவர், நான்காவது படத்தில் (சண்டக்கோழி) விஷால் என்கிற துடிப்பான இளைஞரை சினிமாவிற்கு அடையாளம் காட்டியவர்.
பருத்தி வீரனில் கருப்பு கிராமத்து இளைஞனாக அறியப்பட்ட கார்த்தியை நோக்கி அதே மாதிரியான முரட்டு கிராமத்து கேரக்டர்கள் படையெடுத்தபோது அழகான ஆக்ஷன் ஹீரோவாக்கி, 'பையா 'மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர். இப்படி ஒவ்வொரு படமும் லிங்குசாமியின் பெயரை சினிமா சரித்திரம் பதிவு செய்து கொண்டது.
இப்போது லிங்குசாமியின் அடுத்த ரவுண்ட் ஆரம்பமாகி இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு பையாவின் தெலுங்கு வெர்சனான 'ஆவரா' நேற்று ரீ லீசானது. ஆவராவை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
இதுபற்றி கார்த்தி டுவிட்டரில் "ஆவரா எப்போதுமே எனக்கு ஸ்பெஷலான படம். அந்த காதலும், இசையும் எப்போதும் என்னுடனேயே இருக்கிறது. மீண்டும் அந்த படத்தை பெரிய திரையில் பார்த்து எனது நினைவுகளை மீட்டுக் கொண்டுவர ஆவலாக இருக்கிறது. படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்களுக்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.
ஆம்... உண்மையில் 'பையா' கார்த்தியின் சினிமா வாழ்க்கையின் சிறப்பான பாதையை போட்டுக் கொடுத்த படம்.
இதை அடுத்து லிங்குசாமியின் 'அஞ்சான்' மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
ஆம் இந்தியாவிலேயே முதன் முறையாக மறு எடிட் செய்து வெளியாகும் படம் இது. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலான நீளத்தை குறைத்து, காட்சிகளை மாற்றி அமைத்து, ரி-சென்சார் செய்து
'அஞ்சான்' வெளிவர இருக்கிறது. அதற்காக அவரும், அவரது டீமும் கடுமையாக உழைத்து வருகிறார்கள். அஞ்சான் மறு வெளியீடு தமிழ் சினிமா சரித்திரத்தில் முக்கிய நிகழ்வாக மாற இருக்கிறது.
இப்படத்தை நடிகர் சிவகுமார், 2டி எண்டர்டெயின்மெண்ட் ராஜ்சேகர் கற்பூரசுந்தர பாண்டியன், திருப்பதி பிரதர்ஸ் என்.சுபாஷ் சந்திரபோஸ், டைரக்டர்கள் சரண், பிருந்தா சாரதி, பன்னீர் செல்வம், லோகு, மணி பாரதி, சந்தோஷ், தயாரிப்பாளர் ஹெச்.வேணு, ஜி.ஆர்.வெங்கடேஷ், எடிட்டர் ஆண்டனி இவர்களுடன் சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்ள் 70 பேர்கள் ஸ்பெஷ்ல் ஷோவில் பார்த்து ரசித்தனர். அத்தைனை பேரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இப் படம் வருகிற 28ம் தேதி திரைக்கு வருகிறது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .
சினிமாவை நேசிக்கும், நல்ல சினிமாவை மக்களுக்கு தர நினைக்கும், லிங்குசாமியின் அடுத்த ரவுண்ட் ஆரம்பமாகி இருக்கிறது.











0 comments:
Post a Comment