ஒண்டிமுனியும் நல்லபாடனும் திரை விமர்சனம்
ஒண்டிமுனியும் நல்லபாடனும் திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் கிராமத்தின் வாழ்வியலையும், அங்கு வாழும் மனிதர்களின் கதைகள் எவ்வளவோ இருந்தும் இன்றைய இயக்குனர்கள் ஏனோ அந்த கதைகளை தொட யோசிக்கிறார்கள்.
ஒரு கிடாயின் கருணை மனு, கிடா இந்த வரிசையில் இந்த ஒண்டிமுனியும் நல்லபாடனும் ஒரு கிராமத்தின் வாழ்வியலையும் அங்கு வாழும் ஒரு மனிதரின் வாழ்க்கையும் மிக அழகாக ஒரு கருத்தோடு சொல்லிருக்கிறது.
தன் மகனுக்காக ஒரு கிடா ஒன்றை சாமிக்காக நேர்த்திகடனாக விடுகிறார். அந்த கிடாவுக்கும் அவருக்கும் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை.
நல்லபாடன் என்ற கேரக்டரில் கொங்கு ஸ்லாங் பேசி நம் மனதை நிறைக்கிறார் புரோட்டா முருகேசன். அவரின் நடிப்பே படத்தை நம்மோடு ஒன்ற வைக்கிறது. அவரின் மகனாக வரும் விஜயன் தானொரு கூத்துப்பட்டறை ஆர்டிஸ்ட் என்பதை நிரூபிக்கிறார். அவர் கேரக்டரை இன்னும் வலிமையோடு இயக்குநர் எழுதியிருக்கலாம். சித்ரா நடராஜன், முருகன், சேனாதிபதி, விகடன் உள்ளிட்ட எல்லா கேரக்டர்களும் கச்சிதமாக நடித்துள்ளனர்
ஒளிப்பதிவாளர் விமல் தனது கேமராவை கதையின் ரிதமறிந்து இயக்கியிருக்கிறார். நிறைய ஷாட்ஸ்கள் லைல்-ஆக இருந்தது. NTR-ன் பின்னணி இசை படத்திற்கு பெரும்பலம். இயக்குநர் சுகவனத்தின் கலைநயம் சுகவனம் எழுதி இயக்கிய இந்த படம், எளிய கதையை ஒரு நிலத்தின் உணர்வியல் பயணமாக மாற்றி நிறுத்துகிறது
ஊர்களில் சாமியை வச்சிக்கிட்டு, சாமி கேட்டுச்சுன்னு சொல்லி இவனுங்க சுய நலத்துக்காக ஊர் பெருந்தலைகள் பண்ற அட்டூழியம் இன்னும் நிறைய ஊர்ல நடந்துகிட்டு தான் இருக்கு.
ஒண்டிமுனியும் நல்லபாடனும் - நல்ல படம்.
.jpeg)










0 comments:
Post a Comment