ஆனந்தம் அறக்கட்டளைக்காக யு.கே.முரளி நடத்தும் இசைக் கச்சேரியில் கங்கை அமரன் மற்றும் ரெகானா, கங்கா பாடுகிறார்கள்
அம்பத்தாரில் உள்ள ஆனந்தம் அறக்கட்டளையில் ஆதரவற்ற முதியோர் , தாய் தந்தை இல்லாத குழந்தைகள் ஆகியோருக்காக ஒரு இசை கச்சேரி நடைபெற உள்ளது.
இதற்காக பிரபல இசையமைப்பாளரும், பாடகரும், நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், கவிஞருமான கங்கை அமரன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
நவம்பர் மாதம் 30 ஆம் தேதி காலை முதல் இரவு வரை மூன்று பகுதிகளாக யு.கே. முரளியின் இசை கச்சேரி நடைபெற உள்ளது. இதில் கங்கை அமரன், கங்கா, ரெகனா சூப்பர் சிங்கர் சில் பிரபலமான பாடகர்கள் பாட உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆனந்தம் அறக்கட்டளை சார்பில் பகீரதி ராமமூர்த்தி, சேஷாத்திரி, வினோத், ஆர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர். இதன் மூலம் வரும் வருமானம் ஆனந்தம் அறக்கட்டளைக்கு மேடையில் வழங்கப்படும் என்றார் யு.கே.முரளி
குறையுலகில் யு.கே. முரளிக்கு இது 40 வக வருடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 30, ஞாயிற்றுக்கிழமை | காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை
பாடகர், இசையமைப்பாளர், நடிகர், மேடை நிகழ்ச்சி கலைஞர் மற்றும் Udhaya Raagam UK Murali Innisai Mazhai எனும் முன்னணி லைட் ம்யூசிக் ஆர்க்கெஸ்ட்ராவின் தலைவர் ஆகிய UK முரளி அவர்கள் இசைத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இவ்விசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி 3 அட்டவணைகளில் நடைபெறும்:
காலை 10.00 – மதியம் 1.00
மதியம் 2.00 – மாலை 5.00
மாலை 6.00 – இரவு 10.00
இந்நிகழ்ச்சி அம்பத்தூரில் செயல்படும் ஆனந்தம் டிரஸ்ட் நலனிற்காக நடத்தப்படும் நிதி திரட்டும் விழாவாகும்.
அனாதை முதியோர், குழந்தைகள், பெண்கள் மற்றும் சமூக நலத்திற்காக பல சிறப்பான திட்டங்களை மேற்கொண்டு வரும் திருமதி பகீரதீ ராமமூர்த்தி அவர்களின் சேவையை மதித்து, குறிப்பாக உயிரிழப்பு நெருங்கிய நோயாளிகளுக்கான ‘Palliative Care Centre’ கட்டுமானத்திற்கான நிதி திரட்டமே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.











0 comments:
Post a Comment