கிறிஸ்டினா கதிர்வேலன் திரை விமர்சனம்

 

கல்லுாரியில் தன்னுடன் படிக்கும் கிறிஸ்டினா(பிரதீபா)வை ஒரு தலையாக காதலிக்கிறார் ஹீரோ கதிர்வேலன்(கவுசிக்ராம்). அப்போது தங்கள் நண்பர்களின் பதிவு திருமணத்துக்கு இருவரும் சாட்சிகளாக கையெழுத்து போடுகிறார்கள். அவர்களின் திருமண சான்றிதழில் தவறு ஏற்பட, பெயர் குழப்பதால் இவர்கள் திருமணம் செய்ததாக சான்றிதழ் வருகிறது. கிறிஸ்டினாவுக்கு இன்னொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆன நிலையில் இந்த சான்றிதழ் பிரச்னையை ஏற்படுத்துகிறது. அடுத்து என்ன நடக்கிறது ? என்பதே கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் மீதிக்கதை.


கதிர்வேலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌஷிக் ஹீரோயிசம் அதிகம் இல்லாமல், ஓவர் பில்டப் இல்லாமல் கும்பகோணத்து கிராமத்து இளைஞனாக தனது வேலையை சரியாக செய்து இருக்கிறார். ஹீரோயினாக வருகிற இன்ஸ்டா பிரபலம் பிரதீபா படத்துக்கு மிகப்பெரிய  பிளஸ். பாதிரியாராக வரும் அருள் டி. சங்கர். கௌசிக் நண்பராக வரும் ‘சில்மிஷம்’ சிவா. சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார்.சஞ்சய் படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


என்.ஆர்.ரகுநந்தனின் இசை, பாடல்கள் கேட்பதற்கு இதமாக இருக்கிறது.  பிரகத் முனிசாமி ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது. படத்தில் இந்து, கிறித்துவ மதங்களை சேர்ந்த இருவருக்குள் ஏற்படும் காதலை மையமாக வைத்துதான் திரைப்டங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த திரைப்படத்தில் இறுதி காட்சியில் யாரும் யூகிக்க முடியாத விதத்தில் ஒரு சஸ்பென்ஸை கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார் இயக்குனர் எஸ்.ஜே.என். 

0 comments:

Pageviews