ஐ பி எல் திரை விமர்சனம்
படத்தில் குணசேகரன் (கிஷோர்) டாக்ஸி ஓட்டுநராக இருக்கிறார். பின் ஏதோ சில காரணங்களால் இவர் வேலையை இழந்து விடுகிறார். டெலிவரி வேலை செய்யும் வாசன் பைக்கில் செல்லும்போது குணசேகரன் குறுக்கே வர, அவரை திட்டிவிட்டு சென்றுவிடுகிறார். ஆனால் வேறொரு நபர் அவரது கால்மேல் பைக்கை ஏற்றிவிட, குணசேகரனுக்கு கால் முறிவு ஏற்பட்டு விடுகிறது. கிஷோர் தனது காதலியின் அண்ணன் என்பது டிடிஎஃப் வாசனுக்கு தெரிய வந்து கிஷோரை காப்பாற்ற முயல்கிறார். வாசன் கிஷோரை காப்பாற்றினாரா ? அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை
டிடிஎஃப் வாசன் இந்த படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். தன்னால் முடிந்த அளவு நடித்திருக்கிறார். இந்த முழு படத்தையும் கிஷோர் தான் தாங்கி செய்து இருக்கிறார். படத்தில் கிஷோர் பேசப்படும் வசனங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. அபிராமி, போஸ் வெங்கட், நரேன், குஷிதா தங்களது கதாபாத்திரங்களை இயக்குனர் சொன்னபடி செய்திருக்கிறார்கள். ஹரிஷ் பெராடி கொடூர வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார்.
அஸ்வின் விநாயகமூர்த்தி பின்னணி இசை ஓரளவுக்கு கை கொடுக்கிறது.
எஸ் பிச்சுமணி ஒளிப்பதிவு ஓகே ரகம். கதைக்களம் நன்றாக இருந்தாலும் மேக்கிங்கில் கொஞ்சம் சொதப்பியிருக்கும் இயக்குனர் கருணாநிதி இப்படத்தில் அரசியல்வாதிகளின் கோர முகத்தையும், காவல் துறையின் ஈரமற்ற இதயத்தையும் கிழித்தியிருக்கிறார்.











0 comments:
Post a Comment