வெள்ளகுதிர திரை விமர்சனம்
ஹரிஷ் ஒரி கடன் தொல்லை தாங்க முடியாமல் நிதி சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதனால் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்காக ஊரை விட்டு வெளியேறி அவரது முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக மலை கிராமத்துக்கு தன் மனைவி, மகனுடன் வருகிறார். அங்கு வாழ்வாதாரத்துக்கு வழி தெரியாமல் மூட்டை சுமக்கும் வேலைகளை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்துகிறார். மலை கிராமத்துக்கு வந்து சாதாரண கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்துகிறார். இதற்கிடையில் அந்த ஊர் பெரிய மனிதர் ஊரில் இருக்கும் மக்களிடம் இருக்கும் நிலங்களை தந்திரமாக எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை மலையை விட்டு கீழே அனுப்பும் வேலையை செய்கிறார். அவரின் திட்டத்தை அறிந்து அதை முறியடிக்க முயற்சிக்கிறார் ஹரிஷ் ஓரியின் மனைவியின் அபிராமி போஸ். மலை கிராமத்தில் காய்ச்சும் மூலிகை ரசத்துக்கு ஊரில் கடும் கிராக்கி. அரை தெரிந்து கொள்ளும் ஹரிஷ் ஓரி சாராயம் காய்ச்சுவதையே தன் தொழிலாக்கி பெரும் பணம் சம்பாதிக்க துவங்குகிறார். அதன் பின் அவர் வாழ்க்கை எப்படி மாறியது? அந்த ஊர் மக்களின் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.
நாயகன் ஹரிஷ் ஓரி, மலைகிராம மனிதராகவே மாறி யதார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார். ஹரிஷ் ஓரியின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ், கிராமத்து பெண்ணாகவே மாறி கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் உதிரி விஜயகுமார், அதற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். ரெஜின் ரோஸ், ஜெயலட்சுமி, என்.எஸ்.டி.அறிவு ஆகியோர் கதாபாத்திரங்களும் அவற்றில் அவர்களுடைய நடிப்பும் நன்று.
இசையமைப்பாளர் பரத் ஆசிகவன், பாடல்கள் இல்லை என்றாலும் தனது எளிமையான பின்னணி இசை மூலம் வியக்க வைக்கிறார். ஒளிப்பதிவாளர் ராம் தேவ், எந்தவித விளக்குகளையும் பயன்படுத்தாமல் ஒளிப்பதிவு செய்திருந்தாலும், காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறார். எழுதி இயக்கியிருக்கும் சரண்ராஜ் செந்தில்குமார், சாலை வசதிகள் மற்றும் சில அடிப்படை தேவைகள் இல்லாத மலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி மட்டுமே பேசாமல், அந்த நிலப்பரப்பில் தஞ்சம் அடையும் ஒரு குடும்பத்தை மையமாக கொண்டு, ஒரு சஸ்பென்ஸ் கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.











0 comments:
Post a Comment