அனந்தா படத்தின் இசை வெளியீட்டு விழா
கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அனந்தா. ஜெகபதிபாபு, சுகாசினி, YG மகேந்திரன், தலைவாசல் விஜய் மற்றும் பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தேனிசை தென்றல் தேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
பாடலாசிரியர் பா. விஜய் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். அனந்தா என்பது ஒரு திரைப்படைப்பு இல்லை ஒரு இறை படைப்பு. என்னுடைய திரையுலக பயணத்தில் நிறைய பாடல்கள் எழுதியுள்ளேன், அதில் இறைவனைப் பற்றி அதிகம் எழுதி உள்ளேன். ஆனால் நேரடியாக இறைவனுக்கே எழுதிய பாடல் என்றால் அது இந்த படத்தில் தான். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. இது ஒரு பட வாய்ப்பு என்பதை விட, ஒரு காலத்தின் பதிவு இந்த அனந்தா திரைக்காவியம். இதில் எனக்கும் ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தது என்பது இறைவன் கொடுத்த வரம். என்னுடைய திரை பயணத்தில் கருப்பு தான் என்ற பாடல் தான் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அது தேவா அவர்களின் இசையில் வந்தது. இது அவருடன் ஒரு முழுக்க முழுக்க ஆன்மீக பயணமாக அமைந்தது. இறைவனைப் பற்றி எழுதியதை விட இறைவனுக்கே எழுதிய ஒரு படைப்பு. கிரிஷ் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாபாவை பற்றி முழுமையாக எனக்கு புரிய வைக்க மிகவும் சிரமம் கொண்டார். அவரை பற்றி நிறைய தெரிந்து கொண்டு தான் இந்த படத்திற்கு பாடல்கள் மற்றும் வசனங்கள் எழுத ஆரம்பித்தோம். கிரிஷ் அவர்கள் என்னையும், தேவா அவர்களையும் ஒரு ஆன்மீக சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போதுதான் எனக்கு புரிந்தது இவர்கள் பாபாவை வணங்குபவர்கள் மட்டும் இல்லை, அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று. சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இந்த படத்தை ஒரு கமர்சியல் ரீதியாகவும் சிறப்பாக கையாண்டு உள்ளார். ஒரு இறைவன் ஒரு மனிதரிடம் பேசும் காட்சி படத்தில் உள்ளது. அதற்கு வசனம் எழுதுவது தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த படத்தை பார்க்கும்போது பாபாவின் அருளைப் பற்றி நிச்சயம் அனைவரும் தெரிந்து கொள்வார்கள். எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
இயக்குனர் லிங்குசாமி பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் சத்யா படத்தை இயக்கினார், அதன் பிறகு பாபா படத்தை இயக்கினார். தற்போது சத்ய பாபாவை பற்றி எடுத்துள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள். ஒரு அற்புதத்தையே படமாக எடுத்து உள்ளார். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இதுபோல ஒரு பெரிய முயற்சி எடுத்து செய்ய ஒரு பெரிய மனது வேண்டும். சுரேஷ் கிருஷ்ணா சார் எதை தொட்டாலும் அது அழகாக அமையும். அவரிடம் உதவி இயக்குனராக சேர்வதற்கு அதிக முயற்சி செய்தேன். அவருடைய தீவிர ரசிகன் நான். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நடிகை அபிராமி வெங்கடாசலம் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். நிறைய லெஜன்ட் இங்கே பேசிவிட்டு சென்றுள்ளனர். எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சாய் பாபா அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி உடன் உள்ளேன். எனக்கு இந்த படத்தின் வாய்ப்பு வியாழக்கிழமை தான் வந்தது. இந்த படத்தில் நான் டான்ஸ் ஆட வேண்டி இருந்தது. ஆனால் நான் கடந்த இரண்டு வருடமாக டான்ஸ் ஆடியதில்லை. இருப்பினும் அனைவரும் எனக்கு ஊக்கமளித்தனர். அனைவரிடமும் இரக்கம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசும்போது, சாய்ராம். இப்போது எனக்கு இருக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்த ப்ராஜெக்ட்டை சாத்தியப்படுத்திய கிரிஸ் அவர்களுக்கு நன்றி. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கமர்சியல் படம் எடுப்பவன், ஆனால் என்னை சாய்பாபா பற்றி படம் எடுக்க சொன்னார்கள், அதுவும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். 2009 ஆம் ஆண்டு ஒரு அதிசயம் நடந்தது. என் நண்பர் ஒருவர் பாபாவை பற்றி பயோபிக் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறிக் கொண்டே இருப்பார். அப்போது முதல்முறையாக புட்டபர்த்தி சென்றேன். அங்கு சாய்பாபா அவர்கள் தெலுங்கில் என்னிடம், இத்தனை வருடமாக எங்கிருந்தாய்? ஏன் வரவில்லை? என்று கேட்டார்கள். அந்த இடத்திலேயே நான் அழுதுவிட்டேன். இரண்டு வருடங்களுக்கு பிறகு சாமி அவர்கள் இறந்து விட்டார்கள். அதன் பிறகு நான் என்னுடைய வழக்கமான சினிமா பணிகளை தொடர்ந்து. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிகாலை கனவில் பாபா அவர்கள் தோன்றினார். உடனடியாக என் நண்பருக்கு இதைப்பற்றி சொன்னேன். ஆனால் அவர் உங்களை வைத்து பாபாவின் படத்தை எடுக்க நேற்று தான் பேசிக் கொண்டிருந்தோம் என்று சொன்னார். ஆனால் அப்போதும் நடக்கவில்லை. அதன் பிறகு கிரீஸ் வந்தார்கள், பாபாவின் பக்தர்கள் அனைவரும் இந்த படத்தை கொண்டாட வேண்டும், பாபாவை பற்றி அறியாதவர்களும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அது போல் ஒரு கதை செய்ய சொன்னார். நான் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டேன். அடுத்த நாள் மூன்று மணிக்கு திடீரென முழிப்பு வந்தது உடனடியாக கதை எழுத ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் மொத்த கதையும் எழுதி விட்டேன்.
இந்த படத்தில் நிறைய பேரின் கதைகளை சொல்லி உள்ளோம். அதில் பாபாவின் பங்கும் இருக்கும். இந்த படத்திற்கு தேவா அவர்களின் பங்கு மிகப் பெரியது. வெறும் பத்து நிமிடத்தில் ஒரு பாடலை இசையமைத்து கொடுத்தார். இந்த படத்தில் ஒவ்வொரு காட்சி எடுக்கும் போதும் அதிசயத்திற்கு மேல் அதிசயம் நடந்தது. எனக்கு இந்த படத்தில் ஒரு அருமையான டீம் செட் ஆனது. அவர்கள் அனைவரும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து உள்ளனர். அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.
பாடகர் மனோ பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். நான் சிறு வயதில் சாய்பாபா நாடகத்திற்கு இரண்டு முறை சென்று உள்ளேன். பாபா அவர்கள் எனக்கு ஏதாவது கையில் கொடுக்க மாட்டாரா என்று ஆசைப்பட்ட பக்தர்களின் நானும் ஒருவன். இந்த படத்தில் எனக்கு பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா மற்றும் தேவா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
தயாரிப்பாளர் S தாணு பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்பு சென்னையில் சத்ய சாய்பாபா அவர்களை பார்த்து ஆசி பெற்றேன். அவருடைய பாடல்களும் நினைவுகளும் என்றும் என் மனதில் உள்ளது. கொடுத்து கொடுத்து சிவந்த கரம் என்ற சொல்லுக்கு உதாரணம் பாபா அவர்கள் தான். பல மருத்துவமனைகளையும் கல்லூரிகளையும் உருவாக்கினார். அவருடைய புகழ் உலகம் முழுவதும் இருக்க வேண்டும். சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் பாதம் தொட்டு வணங்க வேண்டும். தேவா மற்றும் பா விஜய் அவர்களின் பணி மிகச் சிறந்தது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும். கடவுள் நிச்சயம் அருள் புரிவார். பாபா அவர்களின் அன்பு உங்களை கவசம் போல் காக்கும் நன்றி.
சுகாசினி மணிரத்னம் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இந்த கதையைப் பற்றி சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் என்னிடம் சொன்ன போதும், இந்த படத்தில் பணியாற்றும் போதும் ஒரு மாய வலையில் இருந்து விலகி தூய்மை கிடைத்தது போல் உணர்வு ஏற்பட்டது. அனைவருக்கும் ஈகோ இருக்கும் ஆனால் நாம் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கும்போது ஒரு அதிசயம் நடக்கும். இந்த கதை மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்த படம் முழுக்கவே ஒரு ஆன்மீக அதிர்வலை இருந்தது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்க சுரேஷ்கிருஷ்ணா மற்றும் கிரீஸ் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
இசையமைப்பாளர் தேவா பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் சாய்பாபா அவர்களுக்கு உள்ளனர். அவருடைய படத்திற்கு நான் இசையமைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது பூர்வ ஜென்மத்து பாக்கியம். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. ரீ ரெக்கார்டிங் பணிகளுக்காக படத்தைப் பார்த்தேன். அப்போதுதான் புரிந்தது யாரும் இந்த படத்தில் நடிக்கவில்லை. அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறி உள்ளனர். அனைவரும் அற்புதமான நடிகர்கள். இந்த படத்திற்கு வியாழக்கிழமை அன்று இசைப்பணிகளை ஆரம்பித்தோம். இந்த படம் மிகப்பெரியதாக வளர்ந்ததற்கு காரணம் பாபாவின் அருள் தான். ஒவ்வொரு பாடலையும் பாடகர்கள் மிகவும் அருமையாக பாடியுள்ளனர். சுரேஷ் கிருஷ்ணா அவர்களுடன் தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பணியாற்றி உள்ளேன். இந்த படத்தில் அல்ல பாடலை சாய்பாபா அவர்களின் பக்தர்கள் அனைவரும் பாட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அனைவருக்கும் நன்றி.
நடிகர் சித்ரா லட்சுமணன் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். அன்பு, அகிம்சை, அமைதி போன்ற பல விஷயங்களை சொன்னவர் தான் சாய்பாபா அவர்கள். அவர் மக்களிடமிருந்து எந்த காலத்திலும் விலகி இருந்ததில்லை. மக்களோடு தான் பயணித்து இருப்பார். அவருடைய திரைப்படம் ஜெனரஞ்சகமாக இருப்பது எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா அவர்களை அனந்தா படத்திற்கு எப்படி தேர்வு செய்தார்கள் என்பதை யோசித்துக் கொண்டே இருந்தேன். இது ஒரு மிகப்பெரிய குருவைப் பற்றிய படம். யார் ஒருவர் குருவின் மீது அதிக மரியாதை வைத்துள்ளாரோ அவரை வைத்து எடுத்தால் தான் சரியாக இருக்கும். தன்னுடைய குருவான பாலச்சந்தர் மீது அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டுவர் தான் சுரேஷ் கிருஷ்ணா. தனது குருவை அதிகமாக மதித்தார் என்பதால் தான் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. சுரேஷ் கிருஷ்ணா மிகவும் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் சினிமாவின் சூப்பர் ஸ்டாரையும், ஆன்மீகத்தின் சூப்பர் ஸ்டாரையும் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை மிக அழகாக எடுத்துள்ளார்கள். எனக்கு வேண்டப்பட்ட அனைவரும் இந்த படத்தில் இருக்கிறார்கள். தேவாவை போன்ற இசையமைப்பாளரை நீங்கள் பார்க்கலாம், ஆனால் அவரைப் போன்ற ஒரு நல்ல உள்ளம் கொண்டவரை நீங்கள் பார்க்க முடியாது. திறமை இருந்தால் இந்த திரையுலகம் உங்களை கைவிடாது என்பதற்கு நடிகை சுகாசினி ஒரு உதாரணம். ஏற்கனவே வெற்றி என்று உறுதி செய்த படம் தான் அனந்தா. நன்றி
தயாரிப்பாளர் கிரிஷ் பேசும்போது, இந்த படத்தின் முழு பயணமும் ஒரு அதிசயம் தான். என் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் பாபா அவர்கள் தான் நிகழ்த்துகிறார். சாய்பாபா அவர்களின் பக்தர்கள் இந்த படம் நடப்பதற்கு உறுதுணையாக இருந்தார்கள். நான் சுரேஷ் கிருஷ்ணா அவர்களை இந்த படத்திற்கு தேடவில்லை, எல்லாம் அதுவாக நடந்தது. இந்த படம் கோடிக்கணக்கான சாய்பாபா பக்தர்களுக்கு ஒரு பதிலாக இருக்கும். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. இந்த படம் பார்த்த பிறகு சாய்பாபா பற்றி தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். 150 நாடுகளுக்கு மேல் உள்ள மக்கள் சாய்பாபா அவர்களை வணங்குகிறார்கள். அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர்கள்
ஜெகபதி பாபு
சுஹாசினி மணிரத்னம்
Y Gee மகேந்திரன்
தலைவாசல் விஜய்
நிழல்கள் ரவி
ஸ்ரீ ரஞ்சனி
அபிராமி வெங்கடாசலம்
தொழில்நுட்பக் குழுவினர்
எழுத்து & இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்பாளர்: கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி
வசனம் & பாடல்கள்: பா. விஜய்
இசை: தேவா
ஒளிப்பதிவு: சஞ்சய் BL
படத்தொகுப்பு: S. ரிச்சர்ட்
தயாரிப்பு வடிவமைப்பு: வாசுதேவன்
நடன அமைப்பு: கலா
ஆடை வடிவமைப்பு: தட்ஷா தயாள்
விளம்பர வடிவமைப்பு: டிசைன் பாயிண்ட்ஸ்
நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: கவின் கிருஷ்ண ராஜ், சிதம்பரம் மணிவண்ணன்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்











0 comments:
Post a Comment