மாஸ்க் திரை விமர்சனம்
படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு அரசியல்வாதி எலக்சனுக்காக பணப்பட்டுவாடா பண்ணுங்க அப்படின்னு சொல்லி கிட்டத்தட்ட ஒரு 440 கோடி ரூபாய் பணத்தை கொடுக்குறாப்பல, அந்த பணத்தை ஒரு கொள்ளை கும்பல் கொள்ளை அடிக்குது. கொள்ளை அடிச்ச கும்பல் யாருன்னு யாருன்னு கண்டுபிடிக்க சொல்லி கதாநாயகன் கவின் கிட்ட கொடுக்குறாங்க. அந்த பணத்தை யார் கொள்ளை அடிக்கிறாங்க? எதுக்காக கொள்ளை அடிக்கிறாங்க? என்பது தான் படத்தின் மீதிக்கதை
கவின் அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை ரொம்ப நேர்த்தியாகவே செய்திருக்கிறார். ஆண்ட்ரியா நெகட்டிவ் கதாபாத்திரம், அதுக்கு என்ன தேவையோ அதை மிக அருமையாக செய்திருக்கிறார். அரசியல் கட்சி தலைவராக பவன் நடிப்பும் அருமை. ஹீரோயினாக ரதி கதாபாத்திரத்தில் ருஹானி சர்மா சிறப்பாக நடித்துள்ளார். சார்லி, ஜார்ஜ் மரியன், ஆடுகளம், பிக் பாஸ் அர்ச்சனா, நரேன், கல்லூரி வினோத் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை. ஜிவி பிரகாஷ் இசையில் கண்ணுமுழி பாடலும், பின்னணி இசையும் சிறப்பு.
கடைசியில் வரும் கொள்ளைக்கு காரணமான விஷயம் உண்மையில் நல்ல விஷயம். காமன் மேன்களை யாரும் ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள் என்பதை வைத்து படம் சொல்லும் மிக சிறப்பு. அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் எடுத்துக்கொண்ட கதையை எவ்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார்.











0 comments:
Post a Comment