ராம் அப்துல்லா ஆண்டனி திரை விமர்சனம்
பள்ளி மாணவர்கள் பின்னணியில் நடக்கும் ஒரு கொலை கதையை தான் இயக்குனர் விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார். கிறிஸ்தவ தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஆண்டனி (பூவையார்) இஸ்லாமிய தம்பதிக்கு பிறந்தவர் பிறந்ததில் இளைய மகன் அப்துல்லா (அர்ஜுன்) இந்து பிராமண தம்பதிக்கு பிறந்தவர் ராம் (அஜய்) அர்னால். இவர்கள் மூவருமே பள்ளி பருவத்திலேயே போதைப் பொருட்கள் எல்லாம் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் மூவரும் திருவள்ளூர் மாவட்ட பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு இவர்கள் மூவரும் நல்ல நண்பர்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து தொழிலதிபர் வேல ராமமூர்த்தி பேரனை கடத்தி அவனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து துண்டு வீசி விடுகிறார்கள். அந்த வழக்கை இன்ஸ்பெக்டர் தீனா விசாரிக்கிறார். பின் ஒரு கட்டத்தில் உண்மையை இன்ஸ்பெக்டர் கண்டுபிடித்து விடுகிறார். அந்த மூன்று மாணவர்களையும் கைது செய்கிறார்கள். அவர்கள் கொலை செய்ததற்கான காரணம் என்ன? அந்த வழக்கிலிருந்து மூன்று பேரும் விடுதலை செய்தார்களா? இதனுடைய பின்னணி என்ன? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.
பள்ளி மாணவர்கள் பின்னணி நடக்கும் ஒரு கொலையை தான் இயக்குனர் சமூக விழிப்புணர்வுடன் சொல்ல முயற்சித்து இருக்கிறார். மூன்று பள்ளி மாணவர்களாக பூவையார், அஜய், அர்ஜுன் பள்ளி இவர்கள் மூவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. அதிலும் பூவையார் டான்ஸ், எமோஷனல் நடிப்பெல்லாம் அட்டகாசமாக இருக்கிறது. இவர்களுடைய பெற்றோர்களாக ஜாவா சுந்தரேசன், வினோதினி, தலைவாசல் விஜய், கிச்சா ரவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் போலீசாக சௌந்தரராஜன் வரும் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. முதல் பாதி கொலை, போலீஸ் விசாரணை என்று செல்கிறது. இரண்டாம் பாதியில் தான் கொலைக்கான செல்கிறது. அதை சுற்றியும் கதை நகர்கிறது. குறிப்பாக போதைப் பொருளால் மாணவர்களுடைய வாழ்க்கை எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது. அதனால் வரும் பிரச்சனைகள் என்ன? என்பதை எல்லாம் படத்தில் இயக்குனர் சிறப்பாக காண்பித்து இருக்கிறார். பல இடங்களில் வரும் காட்சிகள் செயற்கை தனமாக இருக்கிறது. சில காட்சிகள் எல்லாம் பார்வையாளர்கள் மத்தியில் கவர தவிர்த்தது. பின்னணி இசை, ஒளிப்பதிவு ஓகே. இருந்தாலும் இரண்டாம் பாதியை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் தெளிவாகவும் காண்பித்திருக்கலாம். மொத்தத்தில் ஒரு சமூக விழிப்புணர்வை காண்பிக்கவும் வகையில் இந்த படத்தை இயக்குனர் காண்பித்திருக்கிறார்.











0 comments:
Post a Comment