*மர்மம் மற்றும் திகில் நிறைந்த "கிஷ்கிந்தாபுரி", 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது.*kishkindha puni


இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், மகரந்த் தேஷ்பாண்டே மற்றும் தனிக்கெல்லா பரணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தெலுங்கு மொழியில் அக்டோபர் 17 அன்று ZEE5-இல் வெளியானது, மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்போது திரைப்படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது.

இந்த கதை, ஆமானுஷ்ய சுற்றுலாவுக்காக ஒரு பழமையான வானொலி நிலையத்திற்கு சென்ற குழுவைத் தொடர்ந்து உருவாகிறது. அவர்கள் தெரியாமலே ஒரு நின்றுபோன ஆவியை எழுப்பிவிடுகிறார்கள். ஆர்வத்துடன் தொடங்கிய பயணம், விரைவில் ஒரு திரில்லிங்கான அனுபவமாக மாறுகிறது. குழுவினர் அங்கு சிக்கிக்கொண்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் "கிஷ்கிந்தாபுரி" – ZEE5-இல் மட்டுமே ஸ்ட்ரீமிங் ஆகிறது!

0 comments:

Pageviews