காந்தாரா சாப்டர் 1 திரை விமர்சனம்

 

மூலிகைகள், விலையுர்ந்த விளைபொருட்கள் நிறைந்த காந்தாரா வனப்பகுதியை கைப்பற்ற அதன் அருகே இருக்கும் நாட்டின் அரசர் முயற்சிக்கிறார். அதில் அவர் தோல்வியடைந்த நிலையில், அவரது அடுத்த தலைமுறையினர் அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு இறக்கிறார்கள்.


இதற்கிடையே காந்தாரா பழங்குடி கூட்டத்தை சேர்ந்த ரிஷப் ஷெட்டி, காட்டை விட்டு வெளியேறி, தங்களிடம் உள்ள விளைபொருட்களை விற்க முயற்சிப்பதோடு, சாதாரண மக்கள் மீது போடப்பட்டிருந்த தடைகளை அதிரடியாக தகர்த்தி, துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். காந்தாரா மக்களை எதிர்க்க முடியாமல் தடுமாறும் அரசர் ஜெயராம், அவர்களுடன் சமரசமாக பேசி, அவர்களுக்கான அனைத்து மரியாதையையும் வழங்குவதாக அறிவிப்பதோடு, அவர்களின் சக்திகளை கட்டுப்படுத்தி, காந்தாராவை கைப்பற்ற சதி செய்கிறார். அவரது சதிதிட்டம் வெற்றி பெற்றதா?, நாயகன் ரிஷப் ஷெட்டி காந்தாராவையும், மக்களையும் காப்பாற்றினாரா ? என்பதை ரொம்ப சத்தமாக சொல்வதே ‘காந்தாரா’.


படத்தின் நாயகனாக வரும் ரிஷப் ஷெட்டி. இயக்குனராக மட்டுமில்லாமல் நல்ல நடிகராகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் ஆக்ரோசம் சிலிர்க்க வைக்கிறது.. குறிப்பாக தெய்வ ஆவி ஆட்கொள்ளும் காட்சிகளில் அபாரமாக பிரகாசிக்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த் அழகாக இருக்கிறார். ஆரம்பத்தில் அமைதியாக வருபவர், திடீரென்று விஸ்வரூபம் எடுத்து ஆக்சன் காட்சிகளிலும் மிரட்டுகிறார். இவரின் கதாபாத்திரம் இறுதிக்காட்சியில் நம்மை பயமுறுத்த செய்கிறது


மகனுக்கு ஆட்சியை கொடுத்தாலும் ஆளும் அதிகாரத்தை தன்னிடத்தே வைத்துக் கொண்டு அதிகாரம் செய்யும் வயதான மன்னராக ஜெயராமுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம்.. அதில் பக்காவாக பொருந்தியுள்ளார்.. அவரது மகனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.


இவர்களைத் தாண்டி, பிரமோத் ஷெட்டி, பிரகாஷ் துமினாட், ராகேஷ் பூஜாரி ஆகியோர் கிச்சு கிச்சு எபிசோடுக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்.


.முதல் பாகத்தை போலவே இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார் காந்தாராவின் காட்டுப்பகும்திகளையும், இயற்கை காட்சிகளையும் வசீகரிக்கும் அளவில் காட்சி படுத்தி… ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கே.காஷ்யப்..


முதல் பாகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு கதையை ரிஷப் ஷெட்டி சொல்லியிருக்கிறார்., போர்க்களத்தில் சுழன்று அடிக்கும் சண்டைக் காட்சிகள் என, அனைத்திற்கும் அசாத்திய உழைப்பைத் தந்து பார்வையாளர்களுக்கு விஷுவல்களில் முழுமையான அனுபவத்தைத் தருகிறார். அதற்கேற்றாற்போல் அதேபோல், கலை இயக்குனர் பங்கலான் படம் முழுதும் உழைப்பை கொட்டியிருக்கிறார்.

0 comments:

Pageviews