வரவிருக்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) சீசனில் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக நடிகர் உன்னி முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்

 

நடிகரும் கிரிக்கெட் ஆர்வலருமான உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அணியின் இணை உரிமையாளர் ராஜ்குமார் சேதுபதி வெளியிட்டார். கிரிக்கெட் மீதான ஆர்வம் மற்றும் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடனான நீண்ட கால உறவின் அடிப்படையில் உன்னி முகுந்தன் இந்த தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர் என்கிறார் ராஜ்குமார் சேதுபதி. மலையாள சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக மட்டுமல்லாது, உன்னி முகுந்தனின் அனுபவமும் கிரிக்கெட் பற்றிய புரிதலும் நிச்சயம் அணியினருக்கு புது உற்சாகம் கொடுக்கும் என்கிறார். 


உன்னி முகுந்தனின் பிறந்தநாளான செப்டம்பர் 22 அன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


திறமையான கேப்டன், அனுபவம் பெற்ற மற்றும் புதிய விளையாட்டு வீரர்கள் என ரசிகர்களுக்கு உற்சாகமான சீசனாக இது அமையப் போகிறது என உறுதியளிக்கிறது கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி. 


அக்டோபர் மாதத்தின் மத்தியில் இருந்து அணியின் பயிற்சி கேம்ப் திட்டமிடப்பட்டுள்ளது. கேம்ப் முடிந்ததும் இறுதிக்கட்ட விளையாட்டு வீரர்களை மேனேஜ்மெண்ட் அறிவிக்கும். 


நவம்பர் 2025-ல் CCL-ன் 12 ஆவது சீசன் தொடங்குகிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி, பஞ்சாப் மற்றும் போஜ்புரி சினிமா நட்சத்திரங்களை CCL ஒருங்கிணைக்கிறது. 


கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி பற்றி:

 

CCL-ன் மிகவும் பிரபலமான மற்றும் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாக கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி உள்ளது. பல மொழி ரசிகர்களின் விருப்பமான இந்த அணி 2014 மற்றும் 2017 போட்டித் தொடர்களில் இறுதிப் போட்டியை எட்டியது.


கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தேசிய அளவிலும், உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் என வலுவான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது.


செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் பற்றி:


CCL என்பது இந்தியாவின் முதன்மையான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சமாகும். இந்தியா முழுவதிலுமிருந்து பல மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்களை ஒன்றிணைக்கிறது. இதுமட்டுமல்லாது, சினிமா மீதான ஆர்வத்தையும் கிரிக்கெட்டின் சிலிர்ப்பையும் T20 வடிவத்தில் ஒருங்கிணைக்கிறது. CCL என்பது சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களை ஒன்றிணைக்கும் மிகவும் பிரபலமான தளங்களில் ஒன்றாகும்.

0 comments:

Pageviews