நடிகர் ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்

 

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மல்லர் கலையில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.


எளியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவுவதிலும் ஊக்குவிப்பதிலும் பெருமகிழ்ச்சி அடைபவர் நடிகர் லாரன்ஸ். அந்த வகையில், தற்போது தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மல்லர் கலையில் ஆர்வம் கொண்ட மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து வருகிறார் லாரன்ஸ்.  


இதுகுறித்து நடிகர் லாரன்ஸ் தனது சமூகவலைதளப்பக்கத்தில் மல்லர் கலையில் அசத்தும் மாற்றுத் திறனாளிகளோடு வெளியிட்டிருக்கும் வீடியோவில், "இரண்டு கை, கால்கள் நன்றாக இருப்பவர்களே மல்லர் கம்பத்தில் பேலன்ஸ் செய்து ஏறுவது கடினம். அதில் மாற்றுத் திறனாளிகள் சாதிப்பது எவ்வளவு சவாலான விஷயம். ஆனால், அந்த சவாலை செய்கிறார்கள் என்றால் அதுதான் அவர்கள் வாழ்வாதாரம். இதன் மூலம் தங்கள் குடும்பத்தையும் பார்க்கிறார்கள். 


அதனால், இந்த வீடியோவை பார்ப்பவர்கள் உங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்கள், விழாக்கள் மற்றும் மற்ற நிகழ்ச்சிகளிலும் வாய்ப்பு கொடுங்கள். நீங்கள் தரும் ஆதரவு அவர்கள் வாழ்வையே மாற்றும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments:

Pageviews