படையாண்ட மாவீரா திரை விமர்சனம்
காடுவெட்டி குருவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் இது. தந்தையின் மரணம், பழிவாங்கும் உணர்ச்சி, மக்களுக்காக நிற்கும் மனநிலை, சிறை வாழ்க்கை அனுபவங்கள், அரசியலுக்குள் நடந்த பயணம் என பல பரிமாணங்களில் படம் பயணிக்கிறது.
வி.கவுதமன் குருவாக நம்ப வைக்கும் விதத்தில் நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் போன்றோரின் பங்கு படத்துக்கு வலிமையைத் தருகிறது. நாயகி பூஜிதாவுக்கு வழங்கப்பட்ட பாத்திரம் மிகக் குறைவு; பாடல் காட்சிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவு பல காட்சிகளில் இயல்பாக அமைந்திருக்கிறது. இசை பகுதியில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் Sam C.S. கொடுத்த பங்களிப்பு, சில தருணங்களில் பார்வையாளர்களை ஆழமாக ஈர்க்கிறது.
சில இடங்களில் “பெரிய ஹீரோ” பில்ட்அப் அதிகமாக இருக்கிறது. இதனால் ஒரு ஹீரொயிசப்படம் போல தோன்றுகிறது.
படையாண்ட மாவீரா — குருவின் வாழ்க்கையைச் சினிமா பாணியில் சித்தரிக்க முயன்ற படம். உண்மையும் கற்பனையும் கலந்ததால் சுவாரஸ்யம் இருக்கிறது; ஆனால் படத்தின் நம்பகத்தன்மை சற்றே குறைந்து விட்டது. தொழில்நுட்ப தரமும் நடிப்பும் ஓரளவு காப்பாற்றியிருக்கின்றன.
0 comments:
Post a Comment