முதல் பக்கம் திரை விமர்சனம்

 

மதுரையில் குற்றப் புலனாய்வு தொடர்பான நாவலை எழுதி பிரபலமான எழுத்தாளராக இருப்பவர் ஜீவன் குமார். இவருடைய வாரிசு தான் ஹீரோ வெற்றி. இவருடைய தந்தையை பற்றி பத்திரிகையாளர் ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத் ‘மனிதம்’ என்ற பெயரில் அச்சு ஊடகத்திற்கு ஒரு வாரத்திற்கு தொடர் எழுதிக் கொடுத்திருக்கிறார். இதற்காக ஹீரோ வெற்றியை, ஷில்பா சென்னையில் சந்தித்துக் கொள்கிறார்கள். இந்த நேரத்தில் சென்னையில் காவல் அதிகாரியாக தம்பி ராமையா பணியாற்றி வருகிறார். இந்த நேரத்தில் தான் தமிழகத்தினுடைய வெவ்வேறு பகுதிகளில் பாடசாலையில் பயிலும் மாணவர்களும் மாணவிகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்படும் தகவல் வெளியாகிறது. இதை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையும் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இதற்காக தம்பி ராமையா தலைமையில் ஒரு குழு ஏற்பாடு செய்கிறார்கள். அவருக்கு உதவியாக ஹீரோ வெற்றி செல்கிறார். இறுதியில் இந்த தொடர் கொலைகளை செய்கின்ற சைக்கோ யார்.? எதற்காக இந்த கொலைகளை செய்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.



வெற்றி நடித்தால் அது கதையம்சமுள்ள படம் என்பது தெளிவு. ஆனால், அவரது ஒரே மாதிரியான நடிப்பும் மாடுலேஷனும் கொஞ்சம் அலுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்தப் படம் முதல் அவர் ஆக்ஷன் ஹீரோவாக முயற்சி செய்திருக்கிறார். அழகால் ரசிகர்களை கவர்கிறார் ஷில்பா மஞ்சுநாத். கொஞ்ச நேரமே வரும் ரெடின் கிங்ஸ்லி கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தம்பி ராமையா, தனது வழக்கமான குணச்சித்திர வேடத்தில் பார்வையாளர்களை கலங்க வைக்க முயற்சிக்கிறார்.



படத்திற்கு அரவிந்தின் ஒளிப்பதிவும்,  ஏ ஜே ஆரின் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதலை அளிக்கிறது. 



எழுதி இயக்கியிருக்கும் அனிஷ் அஷ்ரப், சைக்கோ திரில்லர் ஜானருடன், சமூக பிரச்சனை பற்றியும் பேசியிருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை பதிவு செய்திருக்கும் இயக்குநர் அதை பரபரப்பான திரைக்கதை மூலமாக கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.

0 comments:

Pageviews