சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

 

சமீபத்தில் நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்கம் தேர்தலில் (2025-2028), சின்னத்திரை வெற்றி அணி சார்பாக தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட பரத், செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நவிந்தர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கற்பகவல்லி மற்றும் அனைத்து வேட்பாளர்களும் (23 பேர்) வெற்றி பெற்றனர். 


இதை தொடர்ந்து, வெற்றி பெற்ற அனைவரும் தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு மு பெ சாமிநாதன் அவர்களையும்

சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாண்புமிகு முதல்வரும் அமைச்சரும் வாழ்த்து தெரிவித்தனர்.

0 comments:

Pageviews