மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ்
ஹ்ரித்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் என இருவருக்கு இடையேயான நடன மோதல் பாடலான 'ஜனாபே ஆலி' (தமிழில் களாபா) இந்த பாடலின் சிறு க்ளிம்ஸ் வீடியோவை தற்போது யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த பாடலில், இந்திய சினிமாவில் நடனத்திற்கு பெயர் பெற்ற ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவர் கிடையே நடைபெறும் ஒரு நடன மோதலாக உள்ளது. இந்த பாடலில் இருவரும் ஸ்டைல் நிறைந்த நடனத்தால் ரசிகர்களை மெய்மறக்க செய்துள்ளனர்.
இந்த பாடலை பிரிதம் இசையமைத்துள்ளார். பாடகர்கள் சச்சேத் டாண்டன், சாஜ் பட் இப்பாடலை பாடியுள்ளனர். இதன் பாடல் வரிகளை அமிதாப் பட்டாசார்யா எழுதியுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படங்களை புதிய யுக்தியுடன் தயாரித்து வருபவர் ஆதித்யா சோப்ரா. இப்போது, அவர் வார் 2 படத்தில் இடம்பெற்றுள்ள ஜனாபே ஆலி பாடலுக்காக, கஜ்ரா ரே மற்றும் கம்லி ஆகிய பாடல்களுக்கு பயன்படுத்திய யுக்தியை மீண்டும் கொண்டு வந்துள்ளார்.
அதன்படி, முழுப் பாடலை இணையத்தில் வெளியிடாமல், ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஒரே திரையில் இணைந்து நடனமாடியுள்ளதை பெரிய திரையில் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என எண்ணுகிறார்.
இதேபோல், பண்டி ஆர் பப்லி படத்தில் இடம்பெற்ற கஜ்ரா ரே பாடலை வெளியீட்டுக்கு முன் ரகசியமாக வைத்திருந்தார். அந்த படம் வெளியான பிறகு ரசிகர்கள் அதில் மெய்மறந்தனர்.
தூம் 3 படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் ரகசியமாகவே வைத்திருந்தார் .அதன் பிரதிபலிக்கும் விதமாக திரையரங்குகளில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். கம்லி பாடல் உலகளவில் வைரல் ஆனது.
வார் 2 திரைப்படம் யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்ஸ் தொடரில் அடுத்து இணையும் அதிரடியான படம்.அயன் முகர்ஜி இந்த படத்தை இயக்கியுள்ளார்.கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ந் தேதியன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
0 comments:
Post a Comment