பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் பெண் சக்தியை கொண்டாடும் ‘பர்தா’
‘பர்தா’ திரைப்படம் த்ரில், பாரம்பரியம், போராட்டம் மற்றும் பல உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது என்பது டிரைய்லரின் முதல் காட்சியிலேயே தெளிவாகியுள்ளது. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாகியுள்ள படத்தின் டிரைய்லரில் பழைய மரபுகள் மற்றும் கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள் தங்கள் சுதந்திரத்தை எப்படி விசாலப்படுத்தினார்கள் என்பதை சொல்கிறது. கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கும் தனிமனிதரின் உணர்வுகளுக்கும் இடையிலான உரையாடலையும் படம் எடுத்துரைக்கிறது.
‘சினிமா பண்டி’, ‘சுபம்’ ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கி இருக்கும் ‘பர்தா’ திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் இளம்பெண்ணான சுப்பு தனது முகத்தை பர்தாவில் மறைத்து வைக்க வேண்டும் என்ற பாரம்பரியத்திற்கு கட்டாயப்பட்டுத்தப்படுகிறாள். ஆனால், நகரத்தைச் சேர்ந்த தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா கிரிஷ் இருவரையும் சந்திக்கும்போது சுப்புவின் விதி மாறுகிறது. சுப்புவின் வாழ்வை சுற்றி இருக்கும் ’பாரம்பரிய’ சுவர்களை உடைக்க அவர்களை உதவுகிறார்கள்.
சமூகத்தைப் பிரதிபலிக்கும் கதையாக ‘பர்தா’ இருக்கிறது. பாரம்பரியம் என்ற பெயரில் தலைமுறை தலைமுறையாக பெண்களை கட்டிவைத்திருக்கும் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களை ‘பர்தா’ விமர்சிக்கிறது. அதேநேரத்தில் ஒற்றுமை, மாற்றத்திற்கான முன்னேற்றம் ஆகியவற்றையும் தைரியமாக பேசும் கதைக்களமாக ‘பர்தா’ உருவாகியிருக்கிறது.
தொழில்நுட்பக்குழு விவரம்:
ஆனந்த மீடியா பேனரின் கீழ் விஜய் டோங்கடா, ஸ்ரீனிவாசுலு பி.வி மற்றும் ஸ்ரீதர் மக்குவா ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படத்தில் ராக் மயூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு: மிருதுல் சுஜித் சென்,
படத்தொகுப்பு: தர்மேந்திரா காகாரலா,
இசை: கோபி சுந்தர்,
தெலுங்கு மார்க்கெட்டிங் & மக்கள் தொடர்பு: வம்சி சேகர்,
மலையாளம் மார்க்கெட்டிங் & தொடர்பு: ஸ்டோரீஸ் சோஷியல், Dr சங்கீதா ஜனசந்திரன்
மக்கள் தொடர்பு (தமிழ்) : சுரேஷ் சந்திரா & அப்துல் ஏ நாசர்.
ஆகஸ்ட் 22, 2025 அன்று தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் ‘பர்தா’ வெளியாகிறது.
0 comments:
Post a Comment