வார் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு இந்தியளவில் துவக்கியதை ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆரின் அதிரடி புரோமொ உடன் யஷ் ராஜ் நிறுவனம் அறிவித்துள்ளனர்
யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வார் 2' . 2025ம் ஆண்டில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமாக வார் 2 அமைந்துள்ளது. பெரிய பொருட்செலவில் பான் இந்திய அதிரடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவை இந்தியளவில் உள்ள திரையரங்குகளில் துவங்கியதை, ஹ்ரித்திக் ரோஷன் , ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கபீர் மற்றும் விக்ரம் கதாபாத்திரங்களில் களமிறங்கும், பரபரப்பான புரோமொ காட்சியுடன் யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
அதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள வார் 2, வரலாற்று சிறப்புமிக்க யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்சில் இது ஆறாவது பாகமாக இணைகிறது . இதற்கு முன் இந்த யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்சில் வெளியான ஒவ்வொரு படமும் வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
வார் 2 படம் இதுவரை இல்லாத அளவிலான மாபெரும் பிரமாண்டமான காட்சியமைப்பு, பரபரப்பூட்டும் அதிரடி, மற்றும் தீவிரம் மிக்க கதை சொல்லலுடன் கூடிய, ஒரு திரை அனுபவமாக இருக்கும் என வாக்குறுதி அளிக்கின்றனர். இதில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவர்கிடையே நடைபெறும் சாகசம் நிறைந்த மோதல் திரையரங்குகளில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் என்கிறார்கள். இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ந் தேதியன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
0 comments:
Post a Comment