TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் !!

 

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது. AR Group இதனை வழங்குகிறது. 


இந்த விருது விழாவில்  தென்னிந்தியா முழுவதும் செய்தி ஊடகங்களில் பணியாற்றும் திறமையான ஊடக நண்பர்களுக்கான நியூ இந்தியன் டைம்ஸ் மீடியா விருதுகள்,   சிறந்த தொகுப்பாளர் | சிறந்த நிருபர் | சிறந்த வீடியோ எடிட்டர் |  சிறந்த வீடியோ கேமராமேன் | சிறந்த நகல் எடிட்டர் | சிறந்த குரல் ஓவர் கலைஞர் | சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளது. 


TNIT குழுமத்தின் CEO ரகுபட் இந்த விருது விழாவை நடத்துகிறார். 


இந்த விழாவினை பற்றிய அறிமுகத்தை மீடியா நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக TNIT சார்பில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில், 

நடிகர் சரவணன், நாகேதிர பிரசாத், மீடியாவிலிருந்து கௌஷிக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விருது விழா குறித்து பத்திரிக்கை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். 


நடிகர் சரவணன் பகிர்ந்துகொண்டதாவது… 

திரைத்துறையில் நடிகர், இயக்குநர், கேமராமேன், எடிட்டர் என எல்லோருக்கும் விருது வழங்குவதைப் பார்த்துள்ளேன் ஆனால் முதல் முறையாக ஊடக நண்பர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. இதை நடத்தும் ரகுபட் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்த விழா தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி. 


நடன கலைஞர் நாகேந்திர பிரசாத் பகிர்ந்துகொண்டதாவது…. 

ஊடக துறையில் இருப்பவர்களுக்கு இவ்வளவு பெரிய  விருதுகள் வழங்குவதை இப்போது தான் பார்க்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஊக்கம் என்பது மிக முக்கியம் அதை செயல்படுத்தும் ரகுபட் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ரகுபட் அவர்களை எனக்கு நெருக்கமாக தெரியும் அவர் எந்தவித பிரதிபலனும் இல்லாமல் இதைச் செய்கிறார். இது இன்னும் ஆயிரம் வருடம் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் நன்றி. 


ஜூரி மெம்பர் மற்றும் பத்திரிக்கையாளர் கௌஷிக் பகிர்ந்துகொண்டதாவது…

முதன் முதலாக இந்த விருது பற்றி ரகுபட் சொன்ன போது, மிகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருந்தது. மீடியா உலகில் அனைவரும் எந்தளவு கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு இது மிகச்சிறப்பான அங்கீகாரமாக இருக்கும். இது 8 வது வருடம், இது போல இன்னும் பல வருடங்களுக்கு இந்த விழா நடக்க வேண்டும் வாழ்த்துக்கள்.


TNIT குழுமத்தின் CEO ரகுபட் பகிர்ந்துகொண்டதாவது… 

மீடியா உலக நண்பர்களுக்கான அங்கீகாரம் இது. இது எட்டாவது வருடமாக நடக்கிறது. முதலில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா தொடர்ந்து இப்போது இங்கு நடத்துகிறோம். அடுத்து கேரளவிலும் நடத்த திட்டமிட்டுள்ளோம். மீடியா நண்பர்கள் எப்போதும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், மக்களுக்காக கடுமையாக உழைக்கிறார்கள், அவர்களை கௌரவபடுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இந்த விழாவிற்கு வருகை தந்து ஆதரவளித்த, நடிகர் சரவணன், நாகேதிர பிரசாத், கௌஷிக் ஆகியோருக்கு நன்றி. 


TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூர் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது.

0 comments:

Pageviews