STR 49 வதந்திகளை முறியடித்து செப்டம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்!


வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் STR 49 shelve ஆகியதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியிருந்தன. ஆனால் இந்தப் படம் ரத்து செய்யப்படவில்லை. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

வடசென்னை யூனிவர்ஸை சார்ந்த இந்தப் படத்தில் சில நிதிச் சிக்கல்கள் இருந்ததாகவும், வெளியிலிருந்து அழுத்தம் வந்ததால் படம் நிறுத்தப்படலாம் என்ற தகவல்களும் வந்தன. ஆனால் இது உண்மை அல்ல.

சிலம்பரசன் டி.ஆர்., இப்படத்திற்கு முன்னுரிமை வழங்கி, சம்பளமாகப் பெறாமல் லாபத்தில் பங்கெடுக்கும் முறைப்படி ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கான ஒரு புரமோ வீடியோ ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 14 அன்று வெளியாகும் கூலி திரைப்படத்துடன் வெளியிடப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது 

STR 49 படத்தை கலைப்புலி எஸ். தாணு அவர்களின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது. ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

0 comments:

Pageviews