பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க , Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “Mr. பாரத்”
இணைய உலகத்தில் செம்ம ஹைபை உருவாக்கிய பாரத் மற்றும் நிரஞ்சன் ஆகியோர் தங்களின் முதல் முழுநீள திரைப்படமான Mr. பாரத் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்க உள்ளனர். லோகேஷ் கனகராஜ் அவர்களும் பாரத், நிரஞ்சனும் இணைந்த சமீபத்திய க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது. அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில், தற்போது படக்குழு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . “Mr. பாரத்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டது!
படப்பிடிப்பு குறித்து Passion ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறும் போது,
“இளம் குழு என்பதாலேயே இவர்களது தெளிவு, திட்டமிடல் மற்றும் அர்ப்பணிப்பு நம்மை ஆச்சரியப்படுத்தியது. கதை அம்சமே எங்களை ஈர்த்தது, ஆனால் திட்டமிட்டபடி நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகச் செயலில் இருந்தனர். ஒரு தயாரிப்பாளராக, இவ்வாறு திறமையான இளைய குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி.”
லோகேஷ் கனகராஜ் வழங்க passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட் மற்றும் தி ரூட் நிறுவனங்களின் சார்பில் சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜகதீஷ் பழனிசாமி ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த திரைப்படம் தற்போது பிந்தைய தயாரிப்பு பணிகளில் தீவிரமாக உள்ளது. இதற்கான அடுத்தஅடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
பிரதான கதாப்பாத்திரங்களில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பாலா சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர் ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிக்க, இளைஞர்களை ஈர்க்கும் ஒரு உற்சாகமான நட்சத்திரக் குழுவாக உருவாகியுள்ளது.
தொழில்நுட்பக் குழுவிலும் மிகச் சிறந்தவர்கள் பணியாற்றியுள்ளனர்:
ஒளிப்பதிவாளர்: ஓம் நாராயணன்
எடிட்டர்: திவாகர் டெனிஸ்
இசையமைப்பாளர்: பிரணவ் முநிராஜ்
கலை இயக்குநர்: பவ்னா கோவர்தன்
மேலும்:
ஆடையமைப்பாளர்: நவாதேவி ராஜ்குமார்
ஒலி வடிவமைப்பாளர்கள்: சுரேன் ஜி & அழகியகூத்தன்
நடன இயக்குனர்: அஸார்
ஸ்டண்ட் கோ-ஆர்டினேட்டர்: அம்ரின் அபுபக்கர்
மேக்கப்ப் ஆர்டிஸ்ட்: ஷயத் மாலிக் எஸ்
கலரிஸ்ட்: கவுஷிக் கே.எஸ்
பப்ளிசிட்டி டிசைனர்: அமுதன் பிரியன்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: பிரதீப் பூபதி எம்
செயல் தயாரிப்பாளர்: ஆர். சிபி மறப்பன்
இணை செயல் தயாரிப்பாளர்கள்: ஏபி ஆதவன் மற்றும் சுப்பிரமணியன்
0 comments:
Post a Comment