Freedom Movie Review

 
*Cast*

M. Sasikumar, Lijo Mol Jose, Mu Ramaswamy, Sudev Nair, Malavika Avinash, Saravanan, Bose Venkat, Ramesh Khanna, Manigandan

*Crew Details* 

Produced By: Pandiyan Parasuraman
Co.Producer: Sujatha Pandiyan 

Written & Directed By Sathyasiva

Music: Ghibran 
Dop: N.S Uthayakumar
Editor: Srikanth N.B
Art: C.Uthayakumar 
Lyrics: Snehan - Mohan Rajan - Arun Bharathi
Action: T.Ramesh - Don Ashok - Danger Mani
Co Director: Vijay Prasaad 
Associate Director: Shankar Nag Vijayan 
Costume Designer: Sivaranjani
Audiography: Harish
Sfx: C.Sethu 
Di & Vfx: Lixo Pixels
Colorist: G.S Muthu 
Vfx Head: Raghava 
Makeup: P. Mariappan 
Costumer: Shankar
Production Manager: M.Thennarsu-Velmurugan 
Stills: A R Murugan 
Pro: Sathish (Aim) 
Marketing & Promotions: Vijayaraghavan R - The Brand Max
Designer: Sindhoor Studio
Chief Executive Officer: B. Vinoth Kumar - P. Sivakumar

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திலிருந்து படம் தொடங்குகிறது.

அந்தப் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க ஈழத் தமிழர்களை முகாம்களில் தங்கியிருந்தவர்களை பிடித்து போய் விசாரிக்கிறார்கள். விசாரணையின் போது ஈழத் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் .வேலூர் கோட்டை சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்படுகிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி மீளுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. இது நடந்த உண்மை சம்பவம் ‌அதை அப்படியே தத்ரூபமாக படமாக்கி இருக்கிறார்கள்.

ஈழ தமிழர்கள் ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் அடைத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் சசிகுமார் அவரையும் பிடித்து போய் வேலூர் கோட்டை சிறையில் அடைத்து துன்புறுத்தப்படுகிறார். சசிகுமார் ஈழத் தமிழனாகவே வாழ்ந்திருக்கிறார். போலீசார் நடத்தப்படும் அடக்குமுறைகளை அவர் அனுபவிக்கும் காட்சிகள் மனதை பிளக்கிறது.

அவருடைய மனைவி கதாநாயகி கர்ப்பத்துடன் அகதியாய் வந்து பின்னர் கணவனை பார்க்கும் பொழுதும் குழந்தையை பெற்ற பொழுது கணவன் சிறையில் இருப்பதை சொல்லாமல் குழந்தையை வளர்த்து அப்பா எங்கே என்று கேட்கும் பொழுது அவருடைய மனது மட்டுமல்ல நம்முடைய மனதும் நொறுங்குகிறது. ஈழத் தமிழ் பெண்ணாய் அற்புதமாய் நடித்திருக்கிறார் அந்த நாயகி.

இடைவேளைக்குப் பிறகு வேலூர் கோட்டையில் இரந்து தப்பிக்க சுரங்கம் தொண்டி அவர்கள் ஒவ்வொருவராய் வெளியேறும் காட்சிகள் திக் திக் நிமிடங்கள். கிளைமாக்ஸ் செம விறுவிறுப்பு.

இலங்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் ஈழத் தமிழர்கள் பட்ட துயரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ள படம் இது. ஆனாலும் எந்த நேரத்தில் இந்த படம தேவையா?

படத்திற்கு இசையும் ஒளிப்பதிவும் பலம் சேர்த்துள்ளது .அதைவிட அதிகமாக சசிகுமாரின் நடிப்பு எந்த படத்திற்கு முதுகெலும்பு.

ஜெயலராக வரும் அந்த மலையாள நடிகர் வில்லத்தனத்தை காட்டி பயமுறுத்துகிறார். இருப்பினும் அவருக்கு ஒன்றும் படத்தில் பெரிய வேலை இல்லை.

அகதிகள் முகாமின் போலீஸ் அதிகாரியாக போஸ் வெங்கட் அசத்தியிருக்கிறார். அதேபோல் சிபிஐ ஆபீசராக ரமேஷ் கண்ணா அலட்டல் இல்லாத நடிப்பு.. இதுவெல்லாம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை சம்பந்தப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவர்களின் உருவ ஒற்றுமை உள்ள நடிகர்களை இயக்குனர் எங்கிருந்து பிடித்து வநதாரோ தெரியவில்லை…சபாஷ்…

வயதானவராக நடித்த அந்த பெரியவர் உண்மையிலேயே எதார்த்தமாக நடித்து அசத்தியிருக்கிறார். ராஜீவ் காந்தி கொலைகள் சம்பந்தப்பட்ட ஒற்றை கண் சிவராசன் மனித வெடிகுண்டு தனு ஆகியோர் சொல்லாமலே அவர்களுடைய கெட்டப்பை காட்டி டைரக்டர் வெளிப்படுத்தி இருப்பது அருமையிலும் அருமை. அகதிகள் முகாமையும் சிறைச்சாலையையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய கலை இயக்குனருக்கும் படத்தின் இயக்குனருக்கும் நம்முடைய பாராட்டுக்கள்.

இலங்கையில் சுதந்திரத்திற்காக போராடிய தமிழ் மக்கள் அகதியாய் வந்த இடத்திலும் சுதந்திரத்திற்காக எப்படி போராடுகிறார்கள் என்பதை இயக்குனர் மிக அருமையாக படமாக்கி காட்டுகிறார். உண்மை கதையே விறுவிறுப்பாக இருக்கும் பொழுது சில உணர்ச்சியூட்டும் சம்பவங்கள் தெளிவாக கோர்க்கப்பட்டு பார்ப்பவளை பரவசப்படுத்துகிறது ‌. இப்பொழுது உள்ள இளைஞர்கள் இதை பார்த்து உண்மை வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் உதவும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய இந்திய சென்சார் போர்டை பாராட்ட வேண்டும். சினிமாவை படமாக பார்த்து அனுமதி கொடுத்துள்ள அவர்களது விசாலமான அறிவு பாராட்டுகுறியது ‌.

0 comments:

Pageviews