மாரீசன் திரை விமர்சனம்

 

பாளையங் கோட்டை சிறையில் இருந்து வெளியே வரும் திருடரான பகத் பாசில் நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டுக்கு திருடப்  போகிறார். அங்கு வடிவேலு சங்கிலியால் கட்டிப் போடப்பட்டு இருப்பதைப் பார்க்கிறார். தனக்கு முதுமையால் ஏற்படும் நினைவிழப்பு நோய் இருப்பதாகவும் அதனால் மகன் கட்டிப் போட்டு விட்டுப் போய் இருப்பதாகவும் அவிழ்த்து விட்டு வெளியே அழைத்துப் போனால் இருபத்தைந்து ஆயிரம் பணம் தருவதாக கூறுகிறார். இதனையடுத்து வடிவேலு ஏ.டி.எம்-ல் இருந்து 25 ஆயிரம் ரூபாய் எடுத்து பகத் பாசிலிடம் கொடுக்கிறார், வடிவேல் அக்கவுண்டில் 25 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் இருப்பதை பார்க்கும் பகத் பாசில் அந்த மொத்த பணத்தையும் திருட நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.


வடிவேலு தனது செண்டிமெண்ட் நடிப்பால், பகத் பாசில் தனது துறுதுறு நடிப்பால் படம் முழுவதையும் சுவாரஸ்யமாக்கியுள்ளனர். கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேனுகா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.


யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு உயிர் கொடுக்கிறது. ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி இருவரது இயல்பான நடிப்பையும் அழகாக காட்சிப்படுத்தி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார். 


கதை, திரைக்கதை, வசனம் எழுதி படைப்பு இயக்குநராக பணியாற்றியிருக்கும் வி.கிருஷ்ணமூர்த்தி, இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு பயணம் மற்றும் அந்த பயணத்தின் நடுவே சில மர்மங்கள் என்ற ரீதியில் சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.


மாரீசன் - சுவாரஸ்யமான படம்.

0 comments:

Pageviews