மாயக்கூத்து திரை விமர்சனம்
நாகராஜன் கண்ணன் என்பவர் படத்தில் எழுத்தாளராக வருகிறார். மூன்று கதைகளை எழுதுகிறார்.
கதைகளின் கதாபாத்திரங்கள் அனைத்தும் நேரில் வந்து எழுத்தாளரை பிரச்சனைகளுக்குள் சிக்க வைக்கின்றன. இந்த பிரச்சனைகளை நாகராஜன் கண்ணன் எப்படி எதிர்கொண்டார் என்பதே படத்தின் மீதிக் கதை.
வன்முறை, குடி, குத்தாட்டம் என்று எதுவுமில்லா, மென்மையான கவிதையாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அரசியலை பேசி விட்டுச் சென்றிருக்கிறது.
படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்துமே சாதாரண இயல்பான ஒரு தோற்றத்தைக் கொடுத்து கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர்.
மிகவும் குறைந்த பட்ஜெட்டில், சொல்லப்போனால் வெறும் 25 லட்சம் செலவில் இப்படத்தை தயாரித்து சாதித்திருக்கிறது படக்குழு. கதை அழுத்தமாகவும் புரியும்படியாகவும் இருந்தால் சின்ன பட்ஜெட் பெரிய பட்ஜெட் என்ற கோட்பாட்டிற்குள் செல்லாமல், நல்லதொரு படைப்பைக் கொடுக்க முடியும் என்பதற்கு மாயக்கூத்து ஒரு தனிச்சிறந்த எடுத்துக்காட்டு தான்.
ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்குமான பிணைப்பு மிக லாவகமாக கையாண்டு அதை திறமையாக கொடுத்திருக்கிறார் எடிட்டர்.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒளிப்பதிவா இது என்று வியக்க வைக்கும் அளவிற்கான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
நாகராஜ் கண்ணன், டெல்லி கணேஷ், மு. ராமசாமி, சாய் தீனா, காயற்றி, ரேகா குமார், பிரகதீஸ்வரன், ஐஸ்வர்யா ரகுபதி ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை அளவோடு நடித்து அதற்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.
0 comments:
Post a Comment