ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” படத்தின் முதல் பாடல் “நதிவே” வெளியாகியுள்ளது!
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஜோடியாக நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படம், கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகி வருகிறது. புகழ்பெற்ற தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தினை வழங்குகிறார். இயக்கும் பணியை நடிகராகவும், இப்போது இயக்குநராகவும் செயல்படும் ராகுல் ரவீந்திரன் மேற்கொள்கிறார்.
முழுமையான காதல் படைப்பாக உருவாகி வரும் இப்படத்திலிருந்து முதல் இசை வெளியீடாக “நதிவே” எனும் பாடல் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ள இந்த பாடல், மனதைக் கொள்ளை கொள்ளும் இசையும், ஈர்க்கும் குரலும் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாக உள்ளது. தமிழ் பாடல்வரிகளைக் கவிஞர் ராகேந்து மௌலி எழுதியுள்ளார். அவருடைய வரிகள், இசையுடன் நெருக்கமாக இணைந்து, காதல் உணர்வுகளை ஆழமாகப் பிரதிபலிக்கின்றது.
ராஷ்மிகா மந்தனா மற்றும் தீக்ஷித் ஷெட்டி இடையிலான வசீகரிக்கும் கெமிஸ்ட்ரி பாடலின் வசீகரத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. விஸ்வகிரண் நம்பி நடன அமைப்பில், நேர்த்தியான நடன அசைவுகள், ராஷ்மிகாவின் அழகான முகபாவங்கள் மற்றும் தீக்ஷித்தின் அழகான நடிப்பு ஆகியவை உணர்ச்சிப்பூர்வமான ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. இசை, பாடல் வரிகள் மற்றும் காட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு ஆழமான, நெகிழ்ச்சியுடன் கூடிய மயக்கும் அனுபவத்தை உருவாக்குகின்றன.
தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.
நடிகர்கள்: ரஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி மற்றும் பிறர்
திரைப்படக் குழு விவரம்:
இசை: ஹேஷம் அப்துல் வாஹாப்
உடை வடிவமைப்பு : ஷ்ராவ்யா வர்மா
தயாரிப்பு வடிவமைப்பு : எஸ். ராமகிருஷ்ணா, மௌனிகா நிகோட்ரி
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பு நிறுவனம்: கீதா ஆர்ட்ஸ், தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர்கள் : தீராஜ் மோகிலினேனி, வித்யா கோப்பிநீதி
கதை மற்றும் இயக்கம் : ராகுல் ரவீந்திரன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
0 comments:
Post a Comment