ஆகஸ்ட் 8 ஆம் தேதி "பாய் (BHAI) ஸ்லீப்பர் செல்ஸ்".வெளியீடு படத்தின் தயாரிப்பாளர் கதாநாயகன் ஆதவா ஈஸ்வரா!
சென்சார் விதிகளைத் தெரிந்து கொண்டு விட்டுத் தான் படம் எடுக்க வேண்டுமா? கமல்ஹாசன் தனது படங்களில் சென்சார் வெட்டுக்களை எவ்வாறு சந்தித்தார் என்பது இப்போது எனக்குப் புரிகிறது, குறிப்பாக விஸ்வரூபம் படம் மத ரீதியாக மிகவும் உணர்திறன் வாய்ந்த பிரச்சினைகள். மேலும் அவர் அதை எப்படி உணர்ந்திருப்பார், எப்படிச் செய்திருப்பார் என்பதும் எனக்குப் புரிகிறது. சென்சார் வாரியம் சுதந்திரத்தில் இன்னும் தாராளமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
"பாய் (BHAI) ஸ்லீப்பர் செல்ஸ்".
படத்தின் தயாரிப்பாளர் கதாநாயகன் ஆதவா ஈஸ்வரா கேள்வி !
திரைப்படத்துறைக்கு வரும் தயாரிப்பாளர்கள் குறைந்து வரும் இந்தக் காலத்தில் வருகிற புதிய தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுவதற்குத் தயாரிப்பாளர் சங்கம் சிலவற்றை முறைப்படுத்த வேண்டும் என்று பாய் படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.
இது பற்றிய விவரம் வருமாறு:
ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். அந்தப் படம் "பாய் (BHAI) ஸ்லீப்பர் செல்ஸ்".இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது.இந்நிலையில் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.
எடிட்டிங் இத்ரிஸ்.படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
இந்தப் படத்தின் கதாநாயகன் ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். சில்லுனு ஒரு காதல் பத்து தல இயக்குனர் ஓபிலி என். கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இன்னொரு எதிர்மறைப் பாத்திரத்தில் சீமன் அப்பாஸ் நடித்துள்ளார்.
படத்தின் பிரதான நாயகன் வேடமேற்று நடித்திருப்பவரும் தயாரிப்பாளருமான ஆதவா ஈஸ்வரா படத்தின் அனுபவம் பற்றிக் கூறும் போது,
"இந்தப் படம் மதங்களைக் கடந்து மனிதாபிமானம் பற்றிப் பேசுகிறது,குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் எப்படி கொல்லப்படுகிறார்கள், குறிப்பாக கோவை குண்டுவெடிப்பை யாராலும் மறக்க முடியாது. இந்த படம் கோவை குண்டுவெடிப்பு பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறது. மேலும் இந்த படம் கோவையை மையமாகக் கொண்டது.
இது ஒரு NON-LINEAR வகை திரைப்படமாக உருவாகியிருக்கிறது . படத்தின் முதல் பாதியில் கேள்விகளாகவும் இரண்டாவது பாதியில் அதற்குரிய பதில்களாகவும் வரும்படி இந்த திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு காட்சிகள் இருக்கும்.
சரியாகத் திட்டமிட்டு நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.
படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.ஆகஸ்ட் 8 ஆம் PVR பிக்சர்ஸ் இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிட எங்களுக்குக் கிடைத்த பெரிய நம்பிக்கை. படத்தை மலையாளத்திலும் வெளியிடுகிறோம
பாய் ஸ்லீப்பர் செல்ஸ் படத்தைப் பொறுத்தவரை படத்தில் இடம்பெறும் லைவ் லொகேஷன்கள் படம் பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும்.அரங்குகள் அமைத்தோ VFX மூலமோ காட்சிகளை அமைக்காமல் அசல் தன்மையுடன் உருவாக்கி உள்ளோம். அதற்காகச் சிரமப்பட்டுத் தான் எடுத்தோம் .ஆனால் அது ஒரு பெரிய சவாலாக இருந்தது. எடுத்து முடித்துப் பார்த்தபோது அதன் விளைவு பெரிய சாகசமாகத் தெரிந்தது.
படத்தின் ஒவ்வொரு நிமிடமும் பார்வையாளர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரமும் என்ன செய்கிறது என்று யூகிக்க முடியாத அளவிற்குப் பரபரப்பாக இருக்கும்.
கதையின் ஓட்டத்திற்குத் வேகத்தடையாக இருக்கும் என்று பாடல்கள் இல்லாமல் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம்.
எங்கள் கதைப்படி யோசித்து நாங்கள் உருவாக்கி இருந்த சில காட்சிகள் சென்சாரால் வெட்டப்பட்டன . காட்சிகளில் ஏழு நிமிடங்கள் வெட்டப்பட்டு இரண்டரை நிமிடங்களாகத் தந்தார்கள்.வெட்டப்பட்ட காட்சிகளுடன் படத்தைப் பார்த்த போது எங்களுக்குப் பெரிய குறையாகத் தெரிந்தது. எனவே அவர்கள் சொன்ன வெட்டுகளை ஈடு செய்யும் முறையில் காட்சிகளை மாற்றி மீண்டும் படப்பிடிப்பு நடத்தி இணைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். அதற்காக மீண்டும் ஒருமுறை சென்சார் செய்ய வேண்டி இருந்தது. நாங்கள் சாதாரணமாக நினைப்பதை சென்சாரில் வேறு ஒரு கோணத்தில் பார்த்து ஆட்சேபத்துக்குரியதாக மாற்றுகிறார்கள். அது எங்களுக்குப் பெரும் சிரமத்தைக் கொடுத்தது. சென்சார் விதிகளைத் தெரிந்து கொண்டுதான் படம் எடுக்க வேண்டும் போலிருக்கிறது .கேட்டால் படம் எடுப்பவர்கள் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும் என்கிறார்கள். எனவே படம் எடுக்க வருபவர்கள் சென்சார் விதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் .
படத்தைப் புரிந்து கொண்டு கதையைப் புரிந்து கொண்டு கதை சொல்வதிலும் காட்சிகள் அமைப்பிலும் உங்கள் கோணத்தில் சரியாகத்தான் இருக்கிறது .ஆனால் சென்சார் விதிகளில் அதற்கு இடமில்லை என்று மறுத்தார்கள்.சென்சாரில் இது ஒரு போராட்டம் என்றால் இன்னொரு போராட்டத்தினையும் நாங்கள் சந்தித்தோம்.
படத்தை வெளியிடுவது பற்றி தமிழ்த் திரை உலகில் பெரும் குழப்பம் நிலவுகிறது. வியாபாரம் எப்படி நடக்கிறது என்பது முதலீடு செய்யும் தயாரிப்பாளருக்கே பெரிய புதிராக உள்ளது .ஏனென்றால் இடையில் நிறைய பேர் வருகிறார்கள். கடைசி வரை படத்தை வாங்குபவர் யார் என்று நேரடியாக அவர்கள் அறிமுகம் செய்வதில்லை, அது ஒரு மர்மமாக இருக்கிறது. இதில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு இந்த வியாபாரப் பேச்சுவார்த்தைகளை நேரடியாக விற்பவரும் வாங்குபவரும் இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாகச் சந்தித்து பேசும் படியான ஒரு நிலையை உருவாக்க வேண்டும். அதற்கான வரைமுறைகளை விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தால், செயல்படுத்தினால் திரையுலகம் மேலும் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
நல்ல கதையம்சம் கொண்ட, நல்ல திரைக்கதை அமைப்பு கொண்ட, நல்ல நட்சத்திரங்கள் நடித்த படங்கள் இப்போது நிறைய வருகின்றன .அவை வெற்றியும் பெறுகின்றன.
அப்படிப்பட்ட படங்கள் வரும் போது படத்தை உருவாக்கியவர்களுக்கும் படம் பார்த்தவர்களுக்கும் நல்ல திருப்தி கிடைக்கும்.
அந்த நம்பிக்கையில்தான் நல்ல திரைக்கதையோடு இந்த படத்தைக் கொண்டு வந்துள்ளோம்.நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை, புதுமையான முறையில் சொல்லப்படும் திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் எப்போதும் வரவேற்று ஆதரிப்பார்கள்; வெற்றி பெற வைப்பார்கள் அந்த நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு . அந்த நம்பிக்கையில் நல்ல கதையாகத் தேர்வு செய்து மேலும் இரண்டு படங்களில் நான் நடிக்க இருக்கிறேன்.
புதிதாக வரும் என்னைப் போன்ற தயாரிப்பாளர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த வியாபார விஷயம் பெரிய மர்மமாக இருக்கிறது. இதை தயாரிப்பாளர் சங்கம் முன்னின்று சரி செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.நான் ஒரு ஹீரோவா, நான் என்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து என் உடற்பயிற்சிகளைச் செய்து, பிறகு என் காட்சிகளுக்குத் தயாராகி, பிறகு நாள் முழுவதும் டயட்டில் இருக்க வேண்டும், பிறகு மீண்டும் உடற்பயிற்சிக்காக ஜிம்மிற்குச் செல்ல வேண்டியிருந்தது. ஏனெனில் இந்தப் படத்திற்காக நான் இந்த கேரக்டருக்காக பிரமாண்டமாக தோற்றமளிக்க தசை மாஸைப் போட்டிருந்தேன். ஒரு தயாரிப்பாளராக , எனது குழுவை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் செட்டுகளில் வைத்திருக்க நான் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது.ர், மற்ற தயாரிப்பு நிறுவனங்களுடனும் எனது சொந்த நிறுவனத்துடனும் அதிக படங்களில் நடிக்க விரும்புகிறேன். நல்ல திரைக்கதைகளை விரும்பி புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன். தங்களை நிரூபிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்காத பல திறமையானவர்கள் இருப்பதாக நான் எப்போதும் உணர்கிறேன். ஒரு இயக்குநராலும் அவருடைய எழுத்தாலும் ஒரு ஹீரோ ஒரு நட்சத்திரமாக மாறுகிறார் என்று நான் உணர்கிறேன். பெரிய அல்லது சிறிய படங்கள் எதுவும் இல்லை, இங்குள்ள அனைவரும் ஒரு திரைப்படத்தை உருவாக்க தங்கள் முயற்சியை மேற்கொள்கிறார்கள், அது ஒரு குழுப்பணி என்று நான் நம்புகிறேன்.
இப்படத்தை தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன.
படத்தை ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியிடும் திட்டத்தில் இருக்கிறோம். அதற்கான வேலைகளைத் தொடங்கி விட்டோம்" என்கிறார்.
0 comments:
Post a Comment