வார் 2 படத்தின் முதல் பாடல் “ஆவன் ஜாவன்”! ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி இடம்பெறும் இந்த ஸ்டைலான காதல் பாடலை யஷ் ராஜ் பிலிம்ஸ் இந்த வாரத்தில் வெளியிடுகின்றனர்!
வார் 2 படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி, இன்று அவரது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார் . அதன்படி, "வார் 2 படத்தின் முதல் பாடலுக்கு 'ஆவன் ஜாவன்'என பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு மெலடி மற்றும் அழகான காதல் பாடல். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி என இருவரும் இணைந்து ஒன்றாக நடனம் ஆடுகின்றனர். இந்த பாடலை பிரம்மஸ்திரா படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான 'கேசரியா' பாடலை உருவாக்கிய பிரிதம் தாதா, அமிதாப் பட்டாசார்யா மற்றும் அரிஜித் சிங் ஆகியோர் இணைந்து வார் 2 படத்திற்கு பாடியுள்ளனர் .பிரிதம் தாதா,அமிதாப்,அரிஜித் மற்றும் ஹ்ரித்திக்,கியாரா என இவர்களின் உற்சாகம் முதன்முறையாக திரையில் ஒன்றாக இணைகிறது.
தாளமிக்க, காதலாக நிரம்பிய 'ஆவன் ஜாவன்' பாடலை இத்தாலியில் படமாக்கினோம். இந்த பாடலை படமாக்கியது வார் 2 படப்பிடிப்பில் நடைபெற்ற மிக இனிமையான நினைவுகளில் இதுவும் ஒன்றாகும்.இந்த வாரத்தில் அனைவரும் இந்த பாடலை கேட்பதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.”
வார் 2 திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதியன்று ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில், உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
0 comments:
Post a Comment