லவ் மேரேஜ் திரை விமர்சனம்

 

படத்தில் விக்ரம் பிரபுவுக்கு 33 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. இதனால் அவர் ரொம்பவே கஷ்டப்படுகிறார். இதனால் சொந்தத்தில் கூட அவருக்கு பெண் கொடுக்க யோசிக்கிறார்கள். எப்படியோ அலைந்து திரிந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊரில் விக்ரம் பிரபுவுக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். நிச்சயதார்த்தத்திற்காக மாப்பிள்ளை வீட்டில் இருந்து அனைவருமே கிளம்பி பெண் வீட்டிற்கு போகிறார்கள். நிச்சயதார்த்தமும் நன்றாக நடந்து முடிந்து விட்டது. பின் ஊருக்கு கிளம்பும் வெளியில் தான் அவர்கள் வந்த வண்டியில் பிரச்சனை வருகிறது. இதனால் அன்று இரவு பெண் வீட்டிலேயே தங்கி காலை செல்லலாம் என்று மாப்பிள்ளை வீட்டார் முடிவெடுக்கிறார்கள். ஆனால், அந்த சமயத்தில் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதுமே ஊரடங்கு வருகிறது. இதனால், பல நாட்கள் பெண் வீட்டிலேயே தங்க வேண்டிய நிலை வந்துவிடுகிறது. கையோடு திருமணத்தையும் நடத்திவிடலாம் என்று பெரியோர்கள் முடிவெடுக்க, அதன்பிறகு தான் தெரிகிறது நாயகி சுஷ்மிதா வேறொருவரை காதலிக்கிறார் என்று. இரவோடு இரவாக வீட்டை விட்டு ஓட்டம் பிடிக்கிறார் சுஷ்மிதா. அதன்பிறகு, விக்ரம்பிரபுவிற்கு திருமணம் நடந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.


விக்ரம் பிரபு கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை இந்த படத்திலும் கொடுத்துள்ளார் அவர். காதல் காட்சிகளில் கச்சிதமான நடிப்பால் மிளிர்கிறார். நாயகிகளாக அறிமுகமாகியிருக்கும் சுஷ்மிதா பட், மீனாக்ஷி தினேஷ் நடிப்பில் கவர்கின்றனர். விக்ரம் பிரபுவின் மாமாவாக நடித்துள்ள அருள் தாஸ் கதாபாத்திரம் அட்டகாசம். இவர்களுடன் ரமேஷ் திலக், கஜராஜ், கோடாங்கி வடிவேலு ஆகியோரும் கவனிக்க வைக்கின்றனர்.


90’ஸ் கிட்ஸ்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் படமாக இப்படம் அமைந்திருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸில் விக்ரம் பிரபு பேசும் வசனங்கள் பலம். காமெடியும் சற்று கைகொடுத்திருக்கிறது.


ஷான் ரோல்டனின் இசையில் ஒரு பாடல் ரசிக்க வைத்திருக்கிறது.


கோபி செட்டிபாளையத்தின் இயற்கை அழகு கொஞ்சும் பசுமையை கண்குளிர வைத்திருக்கிறது ஒளிப்பதிவு

0 comments:

Pageviews