மெட்ராஸ் மேட்னி திரை விமர்சனம்
மெட்ராஸ் மேட்னி - இந்த மிடில் கிளாஸ் இருக்கான்கள இவனுங்க வாழ்க்கையில சாவுற வரைக்கும் உழைச்சிட்டு இருப்பானுங்க, எவ்வளவு சம்பாதிச்சாலும் பெருசா அவனுங்களால சந்தோஷமாவே இருக்க முடியாது. அவனோட அடுத்த தலைமுறை படிச்சி வேலைக்கு போய் சம்பாதிக்கும் போதும் அந்த மிடில் கிளாஸ் மனிதனால பெருசா அனுபவிக்க முடியாது. அப்படி ஒருத்தனோட வலியதான் இந்த படம் சொல்லுது.
படத்தில் காளி வெங்கட் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையை நடித்தார் என்பதை விட வாழ்ந்து காட்டியிருக்கிறார். பொறுப்பான குடும்பத்தலைவியாக ஷெல்லி, அமைதியாக வலிமையான மகள் தீபிகாவாக ரோஷினி, இருவரும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
எழுதி இயக்கியிருக்கும் கார்த்திகேயன் மணி, சாதாரண மக்களின் வாழ்க்கை போராட்டங்களுக்கு மதிப்பளித்து அவர்களது எளிமையான வாழ்க்கையும் ஒரு சாகசம் தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
படத்துல சின்ன சின்ன குறைகள் இருக்கு. இருந்தாலும் அருமையான படம். இந்த வாரம் ரிலீசான படங்களில் மிகவும் நல்லபடம்.
மெட்ராஸ் மேட்னி - மிடில் கிளாஸ் குடும்பங்களின் போராட்டம்.
0 comments:
Post a Comment