யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 படத்திற்கு டப்பிங் செய்யத் தொடங்கிய 'மேன் ஆஃப் தி மாஸஸ்' ஜூனியர் என்.டி.ஆர் !

 

அயன் முகர்ஜி இயக்கத்தில் யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள வார் 2  திரைப்படம் ,2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். மேலும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள இந்த பான்-இந்தியா ஆக்‌ஷன் படத்தில் தனது காட்சிக்கு டப்பிங் செய்யத் தொடங்கியிருப்பதைக் காட்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.


ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் வார் 2  திரைப்படம் , புகழ்பெற்ற யஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸ் பிளாக்பஸ்டர் தொடரின் ஆறாவது பாகமாகும். வார் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானியுடன்  ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கிறார்.


பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகளுடன் தீவிரமான, பரபரப்பான கதைக்களத்துடன் என்.டி.ஆர் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் வார் 2 படம் ஒரு பரபரப்பான காட்சி அனுபவமாக இருக்கும் என படக்குழு உறுதியளிக்கிறார்கள் . 


இந்த படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .

0 comments:

Pageviews