சண்டைக் காட்சிகளே இல்லாத கேங்ஸ்டர் படம் " தாவுத் "
கேங்ஸ்டர் படம் என்றாலே அடிதடி வெட்டு குத்து என சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.
ஆனால் தற்போது " தாவுத் " என்ற பெயரில் அடிதடி வெட்டு குத்து சண்டை காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் உருவாகிறது.
இந்த படத்தை TURM புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S. உமா மகேஸ்வரி தங்களது இரண்டாவது படைப்பாக மிக பிரமாண்டாமாக தயாரித்துள்ளனர்.
பரோல், உடன்பால், பெண்குயின், சேதுபதி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கா காதநாயகனாக நடித்துள்ளார்.
சாரா ஆச்சர் இந்த படத்தின் மூலம்
கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மற்றும் வத்திகுச்சி, காலா போன்ற படங்களில் முக்கி கதாபாத்திரத்தில் நடித்த திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் இருவரும் ஒளிப்பதிவு
செய்திருக்கின்றனர்.
அருண் பாரதி பாடல்களுக்கு ராக்கேஷ் அம்பிகாபதி இசையமைத்துள்ளார்.
R. K. ஸ்ரீநாத் எடிட்டிங் செய்ய,கலை இயக்கத்தை ஜெய் முருகன் மேற்கொள்ள, ஸ்ரீக்ரிஷ் நடனம் அமைத்துள்ளார்.
மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்
தயாரிப்பு - S. உமா மகேஸ்வரி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன்.
படம் பற்றி இயக்குனர் பேசியவை...
யூஸ்வலான சேஸிங், ஃபைட் அந்த மாதிரி இல்லாத ஒரு கேங்ஸ்டர் படம் இது. புது டைப் காமெடி கலந்து ஒரு ஃபேமிலி பேக்கேஜாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன்.
இதுவரை யாரு திரையில் பார்த்திராத ஒரு புது அனுபவத்தை தரக்கூடியா கேங்ஸ்டர் படமாக இது இருக்கும், குறிப்பாக இன்றைய இளைஞர்களை கவரக்கூடிய வகையில் உருவாக்கி இருக்கிறோம்.
இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் வெள்ளித்திரையின் தாவுத்தை சந்திக்கலாம் என்றார் இயக்குனர் பிரசாந்த் ராமன்.
0 comments:
Post a Comment