திருக்குறள் உரைக்குத் தலைப்பை அறிவித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார். இப்போது முப்பாலுக்கும் உரை எழுதி முடித்துவிட்டார். அந்த நூலுக்கான தலைப்பை இன்று அறிவித்திருக்கிறார். ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்று அந்த நூலுக்குப் பெயர் சூட்டியிருக்கிறார்.
திருக்குறளுக்கு எழுதப்பட்டிருக்கும் இந்தப் புதிய உரை நவீனமானது; டிஜிட்டல் தலைமுறைக்கானது; கணினித் தலைமுறைக்குக் கனித்தமிழில் எழுதப்பட்டது; எளிமையும் துல்லியமும் உடையது; பண்டிதரையும் பாமரரையும் ஒருசேரச் சென்றடைவது. அறத்துப்பாலும் பொருட்பாலும் ஞானத்தமிழில் இயங்குவது; இன்பத்துப்பால் கவிதைப் பொருளாய் விளங்குவது என்று சொல்கிறார் கவிஞர் வைரமுத்து. ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ ஜூலை மாதம் நூலாக வெளியிடப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment