தமிழ் சினிமாவின் புதிய நட்சத்திரம் கீதிகா திவாரி!

 

புதிய ’GT’ தற்போது உதயமாகி இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் (GT) கிரிக்கெட் களத்தில் பிரகாசிக்கும் அதே வேளையில், தென்னிந்திய சினிமாவின் புதிய நட்சத்திரமாக கீதிகா திவாரி (Geethika Tiwari) அறிமுகமாகி இருக்கிறார். நடிகர், தயாரிப்பாளர் ஆர்யாவின் தயாரிப்பில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து அவர் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் குறித்தும் தன்னுடைய சினிமா பயணம் குறித்தும் அவர் பகிர்ந்து கொள்கிறார். 


அவர் பேசியதாவது, “சந்தானம் உண்மையிலேயே ‘கவுண்ட்டர் கிங்’. அவருடைய நகைச்சுவை உணர்வு யாருடனும் ஒப்பிட முடியாது. பிஸி ஷெட்யூலிலும் அவருடைய நகைச்சுவை உணர்வு மெடிகேஷன் போல என் மனதை அமைதிப்படுத்த உதவியது. இந்தப் படத்தின் மிகப்பெரும் பலம் ஆர்யா சார்தான். அவருடன் வருங்காலத்தில் இன்னும் அதிக படங்களில் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். இந்தக் கதாபாத்திரம் எனக்கு எதிர்பாராதவிதமாக வந்தது. இன்னொரு படத்திற்காக UK செல்ல திட்டமிட்டிருந்தேன். அப்போது அந்த படம் தாமதமானதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன்” என்றார். 


தன்னுடைய கரியரிலேயே முதன் முறையாக கீதிகா பேயாக நடித்திருக்கிறார். படத்தில் முதல் பாதியில் அழகான கதாநாயகியாகவும் இரண்டாம் பாதியில் ரசிகர்களை பயமுறும் பேயாகவும் நடித்திருந்தார். இதுபற்றி பகிர்ந்து கொண்டபோது, "இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடினமானதாக இருந்தது. குறிப்பாக ஒரு நாளில் 12 முதல் 16 மணிநேரம் வரை அதே உடையில் இருந்தேன். அந்த கஷ்டம் எல்லாம் ரசிகர்கள் பாராட்டுகளுக்கு முன்னால் மறைந்து போனது. நான் எப்போதும் 100% உழைப்பை கொடுப்பேன். அதுபோலதான் மொத்த படக்குழுவும் உழைத்தது”


தமிழில் கீதிகா பேசியபோது, ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற சொற்றொடரை உபயோகித்தார். இதுபற்றி அவர் பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய உணர்வுகளை தமிழில் வெளிப்படுத்த நினைத்தபோது இந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. இது விஜய் சார் சொன்னது என அறிந்தபோது அது இன்னும் அர்த்தமுள்ளதாக மாறியது. தமிழ் சினிமா மற்றும் ரசிகர்கள் மீது அன்பையும் மரியாதையையும் காட்ட இந்த சொற்றொடரைப் பயன்படுத்தினேன்".


சினிமாவுக்காக நடிப்பு, நடனம் மற்றும் ஆக்‌ஷனில் இன்னும் அதிக பயிற்சிகள் எடுத்து வருகிறார். “சினிமா மற்றும் தியேட்டர் தொடர்ந்து என்னை இன்ஸ்பையர் செய்யக்கூடிய விஷயங்கள். ஒவ்வொரு புராஜெக்ட்டிலும் என்னை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும் என நினைக்கிறேன்”.


மணிரத்னம் மற்றும் எஸ்.எஸ். ராஜமெளலி போன்ற இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் கூறுகிறார் கீதிகா. “வலுவான கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் கொடுக்கும் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவதே என் விருப்பம். சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்”.


தமிழ் சினிமாவில் நடிகர்கள் அஜித் குமார், விஜய், ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இவர்களின் நடிப்பும் திறைமையும் தனக்கு இன்ஸ்பையரான விஷயம் என்கிறார். “அவர்களுடைய ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் படங்கள் மிகவும் பிடிக்கும். அவர்களுடன் பணிபுரிய வேண்டும் என்பது விருப்பம்” என்கிறார். 


0 comments:

Pageviews