விஜய் ஆண்டனி-இயக்குநர் சசி: மீண்டும் இணையும் 'பிச்சைக்காரன்' வெற்றிக் கூட்டணி
மாபெரும் வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைகிறது. இரட்டை நாயகர்கள் கொண்ட கதையாக உருவாகவுள்ள இந்த புதிய திரைப்படத்தில் விஜய் ஆண்டனி அவரது தங்கை மகன் அஜய் திஷான் உடன் நடிக்கிறார்.
சசி இயக்கிய மற்றுமொரு வெற்றிப் படமான 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தை தயாரித்த இரமேஷ் P. பிள்ளை, அபிஷேக் ஃபிலிம்ஸ் பேனரில் இந்த புதிய திரைப்படத்தையும் தயாரிக்கிறார். 'லப்பர் பந்து' மற்றும் 'மாமன்' புகழ் சுவாசிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
தமிழ்நாட்டின் வட மாவட்டத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. சசி இயக்கத்தில் தனது தங்கை மகன் அஜய் திஷான் அறிமுகமாவது குறித்து விஜய் ஆண்டனி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு பாலாஜி ஶ்ரீராம் இசையமைக்கிறார், தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவை கையாள்கிறார், ஜிபி பங்கஜாக்ஷன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்றுள்ளார், ஏழுமலை ஆதிகேசவன் கலை இயக்கத்தை மேற்கொள்கிறார், அனைத்து பாடல்களையும் மோகன் ராஜா எழுதுகிறார். முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அபிஷேக் ஃபிலிம்ஸ் இரமேஷ் P. பிள்ளை தயாரிப்பில் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசி மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த மேலும் சுவாரசியமான தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
0 comments:
Post a Comment