அனல் மழை பட இசை வெளியீட்டு விழா !!

 

சாய் பொன்னியம்மன் மூவிஸ் தயாரிப்பில்,  இயக்குநர் அ அய்யனாரப்பன் இயக்கத்தில், ஒரு அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அனல் மழை”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்..


இயக்குனர் அய்யனாரப்பன் பேசியதாவது, 

இந்த நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்த மேடை ஏற எனக்கு 40 வருடங்கள் ஆகியது, பல படங்களில் பணி புரிந்திருக்கிறேன் , இப்போது முதன் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளேன் அதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மோகனுக்கு மிகவும் நன்றி, எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, படத்தின் டிரெய்லர் பார்த்து படத்தின் கதையை புரிந்து கொள்ள முடியாது, படம் பார்த்து படத்தை பற்றி சொல்லுங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், சாதிக்க முயற்சிக்கும் அனைவருக்கும் வாய்ப்பளியுங்கள், எனக்கு வாய்ப்பளித்த மோகன் அவர்களுக்கு நன்றி. 




தயாரிப்பாளர் திரு கே ராஜன் பேசியதாவது,

மழை என்றால் உலகுக்கே குளிர்ச்சி தான் நினைவு வரும், ஆனால் அந்த மழை அனலாக பொழிந்தால் என்ன ஆகும் என்பதே இப்படம் என நினைக்கிறேன், அதை இயக்கிய அய்யனாரப்பனுக்கு வாழ்த்துக்கள், உங்கள் டிரெய்லர் என்னைக் கவர்ந்தது, பாடலும் கவர்ந்தது, அனைவரும் புது முகங்கள் நன்றாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.  படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள், இந்தப் படத்தை பத்திரிக்கையாளர் நீங்கள் தான் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும், இன்றைய காலத்தில் பெரிய படங்களை விட, சிறு பட்ஜெட் படங்கள் தான் வெற்றியைக் கண்டு வருகிறது, அதே போல இந்தப் படமும் வெற்றி அடைய வாழ்த்துக்கள், இந்த வெற்றி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்யும் அனைவருக்கும் வாழ்த்துகள் . 




ஆர் கே அன்புசெல்வன் பேசியதாவது..,

முதலில் இங்கு வந்துள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரையும் தமிழ்நாடு மட்டுமில்லை, உலகம் முழுவதுமாக தெரியும்படி செய்ய வேண்டும், இத்தனை வயதிலும் இந்தப் படத்தை இருவரும் சுமந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்தப் படம் வெற்றியடைய தேவையான அனைத்து உதவியையும் நான் அளிப்பேன், உங்களால் முடிந்த உதவியை நீங்கள் செய்ய வேண்டும் நன்றி. 




நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத் தலைவர் எஸ் தங்கவேல் பேசியதாவது.., 

அனைவருக்கும் வணக்கம், இந்தப் படத்தில் வந்த அனைத்து பாடல்களும் பழைய பாடல்கள் போல மிக அருமையாக இருக்கிறது. இந்தப் படம் கண்டிப்பாக நன்றாக இருக்கும். இந்தப் படத்தில் பணி புரிந்ததற்காக இதை கூற வில்லை இது ஒரு நல்ல படம், அதனால் தான் கூறுகிறேன். இயக்குநர் அய்யனாரப்பன் ஆனந்த கண்ணீர் மழையில் நனைந்து கொண்டு இருக்கிறார், இதே போல் கடைசி வரை அவருக்கு இந்த ஆனந்தக் கண்ணீர் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன், தயாரிப்பாளர் மோகன் அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், நிச்சயம் இந்தப் படம் உங்களுக்கு பெரிய வசூலையும் புகழையும் ஈட்டி தரும் என நம்புகிறேன் நன்றி. 



கதாநாயகி சுபாஷிணி பேசியதாவது, 

என்னை இப்படத்திற்கு தேர்வு செய்த தயாரிப்பாளர் மோகன் அப்பாவுக்கு என் நன்றி.  எனக்கு படம் முழுக்க அவர் உறுதுணையாக இருந்தார்.  எனக்கு இது முதல் படம், என்னுடைய எதிர்காலத்தை உங்களால் தீர்மானிக்க முடியும், படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன் நன்றி. 




கதாநாயகன் அப்துல் ஷரீப் பேசியதாவது, 

அத்தனை கலை உறவுகளுக்கும் எனது வணக்கங்கள், கலை மீதுள்ள ஆர்வத்தினால் கூத்து பட்டறை சேர்ந்து என்னுடைய கலையை வளர்த்து கொண்டேன், இதுவரை 15 படங்களில் துணை நடிகராக நடித்துள்ளேன், இந்த இடத்திற்கு நான் வர பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன், மேடை நாடகத்தில் இருந்து தான் பல நடிகர்களும் தலைவர்களும் உருவாக்கியுள்ளனர், அதே போல இந்த படத்தில் பணி புரிந்துள்ள அனைவரும், ஒரு வெற்றி பாதையை அடைய வேண்டும் அது நடக்கும் என நம்புகிறேன். எனக்கு வாய்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. இந்தப் படத்தை பத்திரிக்கையாளர்கள் நீங்கள்தான் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி.


நடிகர் பிரதிப் செல்வராஜன்  பேசியதாவது.., 

இது எனக்கு ஐந்தாவது படம், எனது முதல் படம் நெடுமீன் அதன் பிறகு இங்கு மீண்டும் வந்துள்ளேன், எனக்கு தியேட்டர் உரிமையாளர்கலிடம் ஒரு வேண்டுகோள் இருக்கிறது, எங்களை போன்ற சிறு முதலீட்டு படங்களுக்கும் காட்சிகள் கொடுங்கள், நீங்கள் அதை கொடுத்தால் தான், அது வெற்றிப் படமா இலை தோல்விப் படமா என்று தெரியும். அது வாய்ப்பு மட்டுமல்ல எங்களுக்கு அடுத்த வாழ்கையும் அதுதான்.  எனது வேண்டுகோளை பரிசீலனை செய்யவும். வாய்ப்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 




நடிகர் இயக்குனர் காதல் சுகுமாரன் பேசியதாவது, 

இந்தப் படத்தின் பாடல் என்னை மிகவும் கவர்ந்திழுத்துள்ளது. அனைத்து ரகமான பாடல்களையும் கேட்ட ஒரு உணர்வு இருந்தது.  இசையமைப்பாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள், இயக்குனர் அய்யனார் அப்பன் அவர்களின் முயற்சியை நினைத்து வியப்பாக உள்ளது.   வயது என்பது ஒரு எண் தான் என்பதை அனைவருக்கும் தெரிய வைத்துவிட்டார், உங்களின் இந்த முயற்சி கண்டிப்பாக உங்களுக்கு பெரிய அங்கீகாரம் கொடுக்கும் நான் முழுமையாக நம்புகிறேன். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள், படத்தில் நடித்த நடிகர் சொன்னதை போல் நானும் திரையரங்கு உரிமையாளர்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து இந்தப் படத்திற்கு உரிய திரையரங்கை கொடுக்கவும்  நன்றி. 




தயாரிப்பாளர் மோகன் பேசியதாவது, 

என் அழைப்பை ஏற்று இங்கு வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, இந்தப்படத்தின் தலைப்பு பற்றி அனைவருக்கும் சந்தேகம் இருக்கும், படம் பார்த்து முடியும் போது அந்த அனல் மழை என்ன என்பது உங்களுக்கு புரியும், இங்கு இருக்கும் அனைவரின் உள்ளத்திலும் ஒரு அனல் இருந்து கொண்டே தான் இருக்கும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனல் இருக்கும், அப்படி பட்ட ஒரு அனல் தான் இந்தப் படம், இந்தப் படம் பார்க்கும் 60 வயது 70 வயது உள்ள அனைவரும் தன் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை நினைத்துக் கொள்வார்கள், பத்திரிக்கை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், எங்களை போன்ற தயாரிப்பாளர்களை காப்பது உங்கள் கடமை, தயாரிப்பாளர் இருந்தால் தான் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும், புதிய இயக்குனர்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும், நான் எனக்காக மட்டும் பேசவில்லை, என்னை போன்றுள்ள அனைவருக்கும் சேர்த்து தான் பேசுகிறேன், இந்தப் படத்தை வெற்றி பெற செய்யவும், அனைவருக்கும் நன்றி. 



நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது…, 

மேடையில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், என்னை இந்த விழாவிற்கு அழைத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி, நடிகர் பிரதீப் சொன்னது போல் பல படங்கள் சரியான திரையரங்குகள் கிடைக்காமல் தோல்வி அடைந்து வருகிறது, நான் நடித்த பல படங்கள் அப்படி ஒரு நிலையை சந்தித்துள்ளது. அந்த நிலை மாற வேண்டும், இந்தப் படம் கண்டிப்பாக அனைத்தையும் தாண்டி வெற்றி பெறும். இயக்குனர் அய்யனாரப்பன் சாரை பார்க்கும் போது, எனக்கு டி ராஜேந்தர் சாரை பார்ப்பது போல இருந்தது, அவரைப்போல பல பாடல்களை வைத்து அசத்தியுள்ளார். அனைத்து பாடல்களும் சிறப்பாக இருந்தது, படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்தனர், முக்கியமாக கதாநாயகிகள் சிறப்பாக நடித்துள்ளனர். அனைவரும் இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவை தர வேண்டும் நன்றி.

0 comments:

Pageviews