போனி கபூரின் முயற்சியால் சர்வதேச தரத்தில் உத்தரப்பிரதேசத்தில் திரைப்பட நகரம் உருவாகிறது!
உத்தரப்பிரதேசத்தில் உருவாக இருக்கும் பிரம்மாண்டமான திரைப்பட நகரத்தின் முதல் கட்டப் பணிகளை தயாரிப்பாளர் போனி கபூரின் பேவியூ புராஜெக்ட்ஸ் தொடங்க உள்ளது.
தயாரிப்பாளர் போனி கபூர் தலைமையிலான பேவியூ புராஜெக்ட்ஸ் எல்எல்பி, 18% வருவாய் பங்குடன் அதிக ஏலதாரராக உத்தரப்பிரதேசத்தில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் உருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டம் விரைவில் தொடங்க உள்ளது. முதல் கட்டத்தில் 13 முதல் 14 மேம்பட்ட திரைப்பட ஸ்டுடியோக்கள் மற்றும் 230 ஏக்கரில் ஒரு திரைப்பட நிறுவனம் ஆகியவை உருவாக உள்ளது. இந்த திட்டம் எட்டு ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும். நொய்டா செக்டார் 21 இல் உள்ள திரைப்பட நகரத்திற்கான லே அவுட் திட்டத்தை போனி கபூர் சமர்ப்பித்துள்ளார் என்பதை யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA) தெரிவித்துள்ளது.
இந்த கட்டுமானம் சலுகை ஒப்பந்த விதிகளுக்கு இணங்கும் என்று இதன் இயக்குனர் கூறியதாக HT தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஒரு நிறுவனம், நீருக்கடியில் படப்பிடிப்பு ஸ்டுடியோ, விருந்தினர் தங்குமிடங்களுடன் மற்றும் பல வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட நகரமாக உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment