'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் ' ஏஸ் ' (ACE ) பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!
மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்' ( ACE).
வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில், இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் …
உடை வடிவமைப்பாளர் சப்னா கால்ரா பேசியதாவது…
எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆறுமுகத்திற்கு நன்றி. இப்படத்தில் விஜய் சேதுபதி சாருக்கு மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் செய்துள்ளேன். மலேசியா சென்று அங்கு இருக்கும் வாழ்க்கைக்கு ஏற்ப ஸ்டைலீஷை இப்படத்தில் கொண்டு வந்துள்ளோம். கண்டிப்பாக இப்படம் பெரிய அளவில் ஜெயிக்கும், அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
எடிட்டர் பென்னி ஆலிவர் பேசியதாவது…
என்னை நம்பி இத்தனை பெரிய புராஜக்டை தந்த இயக்குநர் ஆறுமுகத்திற்கு என் நன்றி. எனக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து தந்தீர்கள் நன்றி. விஜய் சேதுபதி அண்ணா நடிப்பை எடிட் செய்தது மகிழ்ச்சி. அவர் நடிப்பை எடிட் செய்வது மிகவும் கடினம், அவர் எல்லா ஷாட்டிலும் பிரமிக்க வைப்பார். எந்த ஷாட்டை வைக்க வேண்டும் என குழப்பமாக இருக்கும். இனிமேலாவது எங்களுக்காகக் கொஞ்சம் சொதப்பி நடித்தால் நன்றாக இருக்கும். ருக்மணி மேடம் இப்படத்தில் நடிக்கிறாங்கனு சொன்ன பிறகு அவரது சைட் ஏ படம் பார்த்தேன், நடிப்பில் மிரட்டியிருந்தார். இப்படத்திலும் அற்புதமாக நடித்துள்ளார். அவினாஷ் சார் கேஜிஎஃப் டெரர் வில்லன் இதிலும் அழகாக நடித்துள்ளார். காஸ்ட்யூம் எல்லாம் சூப்பராக இருந்தது. ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருந்தது. படம் மிக நன்றாக வந்துள்ளது. இந்தப்படத்திற்கு டிரெய்லர் கட் பண்ணித் தந்த ரூபன் அண்ணாவுக்கு நன்றி. அருமையான இசையை ஜஸ்டின் தந்துள்ளார். இப்படம் நல்ல கமர்ஷியல் படம், அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் கேஜிஎஃப் அவினாஷ் பேசியதாவது..
இந்தப்படத்திற்காக ஆறுமுகம் சார் கால் பண்ணி விஜய்சேதுபதி, யோகிபாபு, ருக்மணி நடிக்கும் படத்தில் உங்களுக்கு ஒரு ரோல் என்றார், நான் உடனே யெஸ் யெஸ் என சொன்னேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ஆறுமுகத்திற்கு நன்றி. விஜய் சேதுபதி மிக அற்புதமான மனிதர். நாங்கள் ஷீட் செய்யும் போது அவரைக் காண ஒரு பெரும் கூட்டம் எப்போதும் காத்திருக்கும். எல்லோரிடமும் பொறுமையாக நின்று பேசுவார். அவரைச் சுற்றி ஒரு அற்புதமான ஆரா உள்ளது. அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. யோகிபாபுவுக்கும், அவருக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி அற்புதம். இப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் பப்லு பிரிதிவிராஜ் பேசியதாவது…,
இயக்குநர் ஆறுமுகம் முதன் முதலில் இப்படத்தில் சின்ன ரோல் என என்னை அழைத்தார். ரெண்டு சீன் தான் என்றார், விஜய் சேதுபதி படம் என்றவுடன் உடனே நடிக்கிறேன் என்றேன். ஆனால் சில நாட்களில், என் கேரக்டர் முக்கியமான ரோலாக மாறிவிட்டது என்றார். என் கதாப்பாத்திரம் பெரிதாக மாறிவிட்டது எனக்கு மகிழ்ச்சி. விஜய் சேதுபதி சார் ஷீட்டில் என்னைப் பார்த்தவுடன், சார் உங்களுக்கு குட் டைம் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்றார். அதே போல் நடந்து விட்டது, இப்போது தமிழில் 6 படம் செய்கிறேன், தெலுங்கில் 22 படம் செய்கிறேன் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் வேலை செய்தது மறக்க முடியாத அனுபவம். இப்படத்தில் நானும் இருப்பது பெருமை. இப்படம் மிக அருமையாக வந்துள்ளது. வரும் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசியதாவது…,
எனக்கு இந்த வாய்ப்பை தந்த 7Cs என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கு, ஆறுமுகம் சாருக்கு என் முதல் நன்றி. விஜய் சேதுபதி சாருடன் எனக்கு இது 4 வது படம். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு பாஸிடிவ் ஆரா இருக்கும். இப்போது இன்னும் அழகாக ஆகிக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் உழைத்த மற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை ருக்மணி வசந்த் பேசியதாவது…
'ஏஸ்' ( ACE) என் முதல் தமிழ்ப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் படம். விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடித்தது மிகுந்த மகிழ்ச்சி. படத்தில் எல்லோருமே எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். அனைவருக்கும் நன்றி. இதுவரை நான் மிக அழுத்தமான படங்கள், கதாப்பாத்திரங்கள் தான் அதிகம் செய்துள்ளேன், ஆனால் ' ஏஸ்' ( ACE) கொஞ்சம் காமெடி கலந்த அழகான மூவி. விஜய் சேதுபதி சார், யோகிபாபு இருவரும் இம்ப்ரவைஸ் செய்வதைப் பார்க்க அழகாக இருக்கும். எனக்குக் கதை சொல்ல ஆரம்பித்ததிலிருந்து, படம் முடியும் வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்த இயக்குநர் ஆறுமுகத்திற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
இயக்குநர் ஆறுமுக குமார் பேசியதாவது…
எனக்காக விஜய் சேதுபதி, எவ்வளவு பெரிய உதவி செய்துள்ளார் என் மீது எவ்வளவு அக்கரை எடுத்துக் கொண்டுள்ளார் என வார்த்தைகளால் சொல்ல முடியாது. எனக்கு அது மிகவும் பர்ஸனல். ருக்மணி அவர் நடிப்புத் திறமை பற்றி சொல்லத் தேவையில்லை. இப்படத்தில் அவரை நடிக்க கேட்ட போது, எனக்குத் தமிழ் வராதே எனத் தயங்கினார். பரவாயில்லை இங்கு எல்லோருமே தமிழ் தெரியாமல் தான் நடிக்கிறார்கள் என சமாதனப்படுத்தினேன். ஷீட்டிங்கில் டயலாக் பற்றி ஆர்வமாக கேட்டுக்கொண்டே இருப்பார், அவர் பியூட்டிபுல் மட்டும் கிடையாது அருமையான நடிகையும் தான். இந்தப்படத்தில் யோகிபாபு மிகப்பெரிய பாத்திரம் செய்துள்ளார். அவரது பாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும். அவினாஷ் சாரோட லுக் ஒன்னே போதும். அவர் வந்தால் பயங்கர மாஸாக இருக்கும். பப்லு சார் மிக வித்தியாசமான ரோல் செய்துள்ளார். காஸ்ட்யூமர் சப்னா, யோகி பாபுக்கு ஒரு காஸ்டியூம் கொடுத்தார். அதுக்கு அவார்டே கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆர்ட் டைரக்டர் முத்து சார் என் முதல் படத்திலிருந்து பணியாற்றி வருகிறார். அவருக்கு நன்றி. ஜஸ்டின் என் நெருக்கமான நண்பர், அவருடன் பணியாற்றுவது ஈஸி. இப்படத்தில் சாம் சி எஸ் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் கமர்ஷியல் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.
நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது…
எல்லாருக்கும் வணக்கம். வந்திருக்கிற பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். முதலில் எடிட்டர் பென்னி ஆலிவர் அவரது பேச்சு மிக தெளிவாக இருந்தது. அனைவரையும் குறிப்பிட்டுப் பேசினார். அவர் சீக்கிரம் இயக்குநர் ஆவார் என நம்புகிறேன் வாழ்த்துக்கள். நான் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் என்னை நம்பி, என் திறமையை நம்பி என்னைப் படத்தில் சிபாரிசு செய்தவர் ஆறுமுகம். இருக்கும்போது வரும் உதவிகள் வேறு, ஆனால் நம்மை யாரென்றே தெரியாத காலத்தில், நம் மீது யாரோ ஒருத்தர் வைக்கிற நம்பிக்கைதான் மிகப்பெரியது. அதற்காக ஆறுமுகத்திற்கு நன்றி. இசையமைப்பாளர் ஜஸ்டின், எனக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். ஏனென்று தெரியாது. அவர் மியூசிக் டைரக்டர், நன்றாக இசையமைப்பாளர் என்பதால் இல்லை. அவரைச் சந்தித்த முதல் நாளிலிருந்தே அவரை எனக்குப் பிடிக்கும். ஒரு முறை கீரவாணி அவரைப் பத்தி பேசியதாவது கேட்டேன். அவர் கூட பிறந்திருந்தால், அவர் வீட்டு ஆட்கள், எவ்வளவு சந்தோஷப்படுவாங்களோ எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது. நம்ம வீட்டு பிள்ளையைப் பத்தி இன்னொருத்தர் பேசுறது ஒரு மிகப்பெரிய ஆளுமை பேசுறதுங்கறது, எனக்கு பெரிய சந்தோஷமா இருந்தது. ஜஸ்டினோட ஒர்க் இந்த படத்துல மிகப் பிரமாதம், ரொம்ப அழகா செய்து தந்துள்ளார். அவினாஷ் சார் பார்க்க தான் கரடு முரடு, ஆனால் மனதில் ரொம்ப ஸ்வீட்டான ஆள். க்யூட். ருக்மணி மிகத் திறமையான நடிகை. மலேசியாவில் ஒரு இடத்தில் ஷீட் செய்தோம், அந்த இடத்தை பற்றிய வரலாறே சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி எனக்கேட்டேன், இங்கே வருவதால், இந்த இடம் பற்றி படித்து விட்டு வந்தேன் என்றார். இதிலிருந்தே உங்களுக்கு தெரியும் படத்திற்காக அவர் எவ்வளவு தயாராகியிருப்பார் என்று, மிக அற்புதமாக நடித்துள்ளார். பப்லு இவர் நல்லவரா? கெட்டவரா? என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் மிக நல்ல ரோல் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் கிரண் நான் காந்தி டாக்கீஸ் படம் செய்யும் போது பழக்கம், அவர் இப்படத்தில் அருமையாகச் செய்துள்ளார். கலை இயக்குநர் மிக அப்பாவியான மனிதர், இப்படி ஒரு மனிதருடன் தான் இருக்க வேண்டும் அந்தளவு நல்லவர். இப்படத்தில் சூப்பராக செய்துள்ளார். யோகிபாபு இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோ. அவரைப்பற்றி சமீபத்தில் தவறான செய்திகள் வருகிறது. அது உண்மையில்லை, அவர் நல்ல மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் அவரை எல்லோரும் ரசிப்பார்கள். இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஏஸ்' ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன் , ஜாக்கிநாரீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கிரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கும், சாம் சி. எஸ். படத்திற்கான பின்னணி இசையையும் அமைத்திருக்கிறார்கள். பென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஏ.கே. முத்து கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கமர்சியல் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
'ஏஸ்' ( ACE) திரைப்படம் வரும் 23ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
0 comments:
Post a Comment