“கன்னி” குறும்பட அறிமுக விழா !! kanni short film
Red Bird Production சார்பில் அனன்யா அம்சவர்தன் தயாரிப்பில், கரீஷ்மா இயக்கத்தில் ராம் நிஷாந்த், மிருதுளா நடிப்பில், 90 களின் பின்னணியில் ஒரு பெண்ணின் கதையைச் சொல்லும் அழகான படைப்பாக உருவாகியுள்ள குறும்படம் “கன்னி”.
இக்குறும்படத்தின் அறிமுக விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
தயாரிப்பாளர் அனன்யா அம்சவர்தன் பேசியதாவது…
எங்கள் கன்னி குறும்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது, பெரும் மகிழ்ச்சி. உங்களது பாராட்டுக்கள் தான் இந்த வெற்றிக்குக் காரணம். கன்னி குறும்படம், கல்லூரியில் வெகு சாதாரணமாகப் பேச ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக ஆனது. இந்த குறும்படத்திற்காக ராம் நிஷாந்த், மிருதுளா இருவரையும் நடிக்க அழைத்தோம். அவர்களது பங்களிப்புக்கு நன்றி. எடிட்டர் அருண், இசை தேஜஷ், ஒளிப்பதிவாளர் கிச்சா ஆகியோருக்கு நன்றி. அனைவரது உழைப்பினால் தான் இந்த கனவு நிஜமானது. எல்லோருக்கும் நன்றி. இப்படைப்புக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.
எடிட்டர் அருண் குமார் பேசியதாவது..,
இந்த விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி. இது எனக்கு மிகவும் பர்ஸனல் புராஜக்ட். இது ஒன்லைனாக இருந்த போதிலிருந்தே தெரியும். 1995 பீரியடை எப்படி பண்ணப் போகிறோம் எனத் தயக்கமிருந்தது. கரீஷ்மா அதைச் சாதித்துவிட்டார். மிக அட்டகாசமாக இயக்கியுள்ளார். தேஜஷ் நல்ல இசையைத் தந்துள்ளார். ஒளிப்பதிவு மிக அருமையாக இருந்தது. நடிகர்கள் அனைவரும் நல்ல நடிப்பைத் தந்துள்ளனர். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் தேஜஷ் கிருஷ்ணா பேசியதாவது…
அனன்யா அம்சவர்தன் மற்றும் கரீஷ்மாவுக்கு என் முதல் நன்றி. இந்த குறும்படத்தின் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ராம் மிக அட்டகாசமாக நடித்துள்ளார். அருண் மிகச்சிறப்பாக எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டூட்ண்ட்ஸை சப்போர்ட் செய்யும் அனன்யாவுக்கு நன்றி. இன்னும் அவர் ஆதரவில் நிறைய இயக்குநர்கள் வருவார்கள் என நம்புகிறேன் நன்றி.
நடிகை மிருதுளா பேசியதாவது…
கன்னி சின்ன படமாகத் தான் ஆரம்பித்தது. காலேஜ் புராஜக்ட்டாக தான் செய்வதாக அனன்யா சொன்னார். ஆனால் எல்லோருடைய உழைப்பில், மிக அட்டகாசமாக வந்துள்ளது. என்னுடைய காலேஜ் நாட்களில் இப்படியெல்லாம் யாரையும் பார்க்கவில்லை. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.
நடிகர் ராம் நிஷாந்த் பேசியதாவது..,
இந்தப்படம் ஒரு காலேஜ் பொண்ணு எடுத்தது என யாராலும் நம்ப முடியாது. காலேஜ் படிக்கும் போது , இப்படியெல்லாம் யோசிக்க முடியாது. கரீஷ்மாவிற்கு வாழ்த்துக்கள். அனன்யா நல்ல படம் தயாரித்துள்ளார், நன்றி. கரீஷ்மா எடுக்கும் முதல் படத்தில் நான் நடிப்பேன் என நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி.
நடிகை ரியா பேசியதாவது…
சின்ன வயது கன்னி ரோல் செய்ய வேண்டுமென கரீஷ்மா சொன்ன போது பெரிய தயக்கம் இருந்தது. இந்தளவு மிகப்பெரிதாக வரும் என நான் நினைக்கவில்லை. வாய்ப்பு தந்த அனன்யா அம்சவர்தன் மற்றும் கரீஷ்மாவுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
ஶ்ரீவாரி பிலிம்ஸ் ரங்கநாதன் பேசியதாவது….
பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. கரீஷ்மாவின் அப்பா சரவணன் எனது நெருங்கிய நண்பர். கரீஷ்மாவை சின்ன பெண்ணாக இருந்து தெரியும். அவர் இப்படி ஒரு படத்தை இயக்கியிருப்பது பெருமையாக இருக்கிறது. பாலச்சந்தர் படம் மாதிரி இருந்தது. மேக்கிங் மிக அற்புதமாக இருந்தது. இந்த டீமே அற்புதமான டீமாக உள்ளது. இசையமைப்பாளர், எடிட்டர் எல்லோரும் அருமையாகச் செய்துள்ளனர். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். கரீஷ்மாவுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
விநியோகஸ்தர் கோகுல் பேசியதாவது….
என்னை அழைத்த சரவணன் சாருக்கு நன்றி. கரீஷ்மாவிற்கு அவர் அப்பா மிகப்பெரிய ஆதரவாக உள்ளார். கரீஷ்மா பெருமை மிகு படைப்பாளியாக உருவாகியுள்ளார். காலேஜ் முடியுமுன்னரே கண்டிப்பாக அவர் திரைப்படம் இயக்குவார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகர் கயல் சந்திரன் பேசியதாவது…
சரவணன் அன்ணா என் மகள் படம் இயக்கியுள்ளார் என சொல்லி கன்னி படம் காட்டினார். அத்தனை அற்புதமாக இருந்தது. ஒரு கல்லூரி படிக்கும் பெண் இப்படி மெச்சூர்டான படம் செய்ய முடியுமென கரீஷ்மா நிரூபித்துள்ளார். சரவணன் அண்ணாவுக்கு மிகப்பெரிய பெருமை. தயாரிப்பாளர், எடிட்டர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் எல்லோரும் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளனர். எல்லோரும் திரையுலகில் வளர வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது…
ஒரு குறும்படம் என்கிற உணர்வையே இந்தப்படம் தரவில்லை, ஒரு ஆத்மா படத்திலிருந்தது. இந்த குறும்படத்தை எடுத்த அனன்யாவிற்கு என் முதல் வாழ்த்துக்கள். கரீஷ்மாவை பிறந்தது முதல் தெரியும். அவரிடமிருந்து இப்படி ஒரு படைப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. கல்லூரி காலத்தில் அவர்கள் வாழ்க்கையைத் தான் எடுத்திருப்பார், என நினைத்தேன். மிக கவனமாக மிக அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட படைப்பாகத் தெரிந்தது. தமிழ் சினிமாவில் ஜாதிப்பிரச்சனை கதைகள் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் கதைகளாக ஆகிவிட்டது. பெண்ணுரிமை, வாழ்வியல் பிர்ச்சனை பற்றிய கதைகளே இல்லாமல் போய் விட்டது. அதைப் பேசும் படமாக இப்படம் இருப்பதாக உணர்கிறேன். பெண்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. டயலாக் எல்லாம் மெச்சூர்டாக இருந்தது. ஃபிரேமிங் எல்லாம் மணிரத்னம் சார் மாதிரியும் கதையில் பாலச்சந்தர் சார் மாதிரியும் இருந்தது. கரீஷ்மா தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக வருவார். படக்குழு அனைவருமே மிக அற்புதமான உழைப்பைத் தந்துள்ளனர். அனைவரும் மிகப்பெரிதாக வருவார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகர் வித்தார்த் பேசியதாவது…
இப்படைப்பைத் தயாரித்த அனன்யாவிற்கு என் முதல் வாழ்த்துக்கள். சரவணன் என் நெருங்கிய நண்பர். கரீஷ்மாவை வாழ்த்தும் ஒரு தகப்பனாகத் தான் வந்தேன். ஆனால் இங்கு என்னை சீனியர் நடிகர் என்று சொல்லி விட்டார்கள். இந்தப்படம் பார்த்து பாலச்சந்தர் மூவி பார்த்த ஃபீல் தான் வந்தது. எப்படி இந்த டயலாக எழுதினாய் என கரீஷ்மாவிடம் கேட்டேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கரீஷ்மா எப்படி இவ்வளவு மெச்சூர்டாக எடுத்தார் என ஆச்சரியம் தான். ராம், மிருதுளா இரண்டு பேரும் அருமையாக நடித்துள்ளனர். 90 ல் நடக்கும் கதையை அருமையான கேமரா கோணங்களில் எடுத்தது ஆச்சரியமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் சிறப்பாகச் செய்துள்ளார். கரீஷ்மா அசத்திவிட்டார். அனைவருக்கும் சினிமாவில் பெரிய இடம் காத்திருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குனர் கரீஷ்மாவின் அப்பா சரவணன் பேசியதாவது…
என் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி. கரீஷ்மாவிடம் நான் எப்போதும் சொல்வேன் சினிமாவில் முக்கியம் புரடியூசர் தான், தயாரிப்பாளர் இல்லாமல் யாரும் இல்லை அதனால் எப்போதும் தயாரிப்பாளரை மதிக்க வேண்டுமெனச் சொல்வேன். அனன்யாவிற்கு முதல் நன்றி. இந்த விழாவில் கரீஷ்மாவின் அப்பா என சொல்வதில் பெருமையாக இருக்கிறது. இயக்குநர் பிரபாகரனும் நானும் ரூம்மேட் .இந்த 20 வருடமாக சினிமாவை நம்பி இருந்தோம். அந்த சினிமா இந்த வெற்றியைத் தந்துள்ளது. நான் சினிமாவில் இருப்பதால் நிறையக் குறும்படங்கள் பார்ப்பேன், ஆனால் இந்த குறும்படத்தைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. கரீஷ்மா இன்னும் எனக்கு குழந்தைதான் ஆனால் அவள் பிராஸ்டிடியூட் பற்றி படமெடுத்தது ஆச்சரியமாக, அதிர்ச்சியாக இருந்தது. உனக்கு சமூக சிந்தனை உள்ளது அதில் தொடர்ந்து படமெடு என வாழ்த்தினேன். அருண், தேஜஷ் எல்லோரும் மிக அருமையாகச் செய்துள்ளனர். எனக்கு மிகப்பெரிய பெருமையாக உள்ளது. முழுமையான சந்தோசமாக உள்ளது. என் நண்பர்களுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
நடிகர் தயாரிப்பாளர் அம்சவர்தன் ரவிசந்திரன் பேசியதாவது…
நான் இவ்விழாவில் தந்தையா, விருந்தினரா என்பதே குழப்பமாக உள்ளது. அனன்யா முதலில் ஒரு குறும்படம் எடுக்கிறேன் என்று வந்தார். சரி என்றேன் கதை என்ன எனக் கேட்டேன் சொல்லவே இல்லை. படம் முடிந்த பாருங்கள் என்றார். அவுட் பார்த்து மிரண்டு விட்டேன். முதல் வாழ்த்து ஒளிப்பதிவாளருக்கு, அத்தனை அற்புதமாக விஷுவல்ஸ் கொண்டு வந்துள்ளார். ராம், மிருதுளா அற்புதமாக நடித்துள்ளார்கள். கரீஷ்மா மிக அற்புதமாக இயக்கியுள்ளார். இந்த மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்கள். அடுத்தடுத்து நல்ல படங்கள் எடுப்பார்கள். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் கரீஷ்மா பேசியதாவது…
என் அப்பா அம்மாவிற்கு முதல் நன்றி. சினிமா ஒரு காம்படிசன் மீடியம், ஆனால் என்னை நம்பிய அவர்களுக்கு நன்றி. என் தயாரிப்பாளர் ஃபிரண்ட் அனன்யாவுக்கு நன்றி. நான் என்ன கேட்டாலும் அவரிடம் நோ எனும் சொல்லே வராது. எங்களை நம்பிய அம்சவர்தன் அங்கிளுக்கு நன்றி. எடிட்டர் அருணுக்கு நன்றி. தேஜஷ் நிறையக் காட்சிக்கு உயிர் தந்தது அவர் தான் அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் என்னுடன் நிறையச் சண்டை போடுவார் ஆனால் விஷுவல்ஸ் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடன் உழைத்த மொத்த கலைஞர்களுக்கும் நன்றிகள். ராம் நிஷாந்த் எதுவுமே கேட்காமல் ஒப்புக் கொண்டார். மிருதுளா மிக ஆதரவாக இருந்தார். ஒரு யங் டீமுக்கும் இவ்வளவு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.
கல்லூரி இளைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள “கன்னி” குறும்படம் Moviebuff தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது
0 comments:
Post a Comment