Gangers Movie Review

Sundar .C - as saravanan

Vadivelu as singaram

Catherine therasa as sujitha

Vani bhojan as madhavi

Munish kanth as pattaisaamy

Bakhs as kanakku vaathiyaar

Kaalai as amalathasan

Hareesh peradi as mudiyarasan

Meme gopi as malaiyarasan

Arul doss as kottai arasan

Santhana barathy as akash 

Vichu as head master 

Master prabhakar as soori 

Madhu suthan rao as minister 

Rishi as mutharasan 

special appearance - vimal 

 *TECHNICIAN* ;-

Written & directed by - 
Sundar .C

Producers 
 - khushbu sundar  
(Avni Cinemax P Ltd),
 A C S . Arunkumar
 (Benzz Media Pvt Ltd)

Music - C . Sathya

Screenplay & dialogues - Venkatt ragavan

Cinematography - E. Krishna moorthy 

Editor - pravin antony 

Art director - Gururaj 

Stunts - Rajasekar 

Choreography - Brindha , dheena

Lyricist - pa.vijay, arun bharathi , lavaradhan, super subhu, madras miran , vettipaya venkat

PRO - Sathish (AIM)

அரசியல் செல்வாக்கு மிக்க ஊர் பெரியவர்கள் மைம் கோபி மற்றும் அருள்தாஸ் சகோதரர்கள் இவர்கள் நடத்தி வரும் பள்ளியில்  மாணவி ஒருவர் காணாமல் போகிறார். அந்த பள்ளி ஆசிரியையான கேத்ரின் தெரசா கமிஷ்னர் அலுவலகத்திற்கு புகார் ஒன்றை அனுப்புகிறார்.

இதனையடுத்து அந்த புகார் அடிப்படையில் ரகசிய போலீஸ் ஒருவரை  காவல்துறை அனுப்புகிறது. அந்த பள்ளிக்கு உடற்பயிற்சி ஆசிரியராக  புதிதாக வேலைக்கு சுந்தர்.சி, வருகிறார்.  ஏற்கனவே வடிவேலு அங்கு உடற்பயிற்சி ஆசிரியராக இருந்து வருகிறார்.

அந்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக புகார் கொடுத்ததால்  மைம் கோபி மற்றும் அருள்தாஸ் இருவரும் கேத்ரினை அவமானப்படுத்த இதனையடுத்து சுந்தர் சி, முகத்தின் துணியை மூடிக்  கொண்டு மைம் கோபி, அருள்தாஸ் இருவரையும் அடித்து தும்சம் செய்வதோடு இவர்களுடைய அண்ணன் ஹரீஷ் பெராடி  மகனையும் அடித்து மருத்துவ மனைக்கு அனுப்புகிறார்.

இதனையடுத்து  வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஹரீஷ் பெராடி  மருத்துவமனைக்கு வருகிறார். ஒரு கட்டத்தில் கேத்ரின் தெரசாவிறகு சுந்தர்.சி  காவல்துறை அதிகாரி இல்லை என்ற உண்மை தெரிய வருகிறது.

இறுதியில் சுந்தர்.சி யார்?,  சுந்தர் சி, தலைமறைவாக இருக்கும் ஹரீஷ் பெராடியை  வரவழைத்தற்கான காரணம் என்ன?  என்பதே ‘கேங்கர்ஸ்’  படத்தின் மீதிக்கதை.

சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  சுந்தர் சி அமைதியாக வந்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல்,காமெடி,சண்டை என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

உடற்பயிற்சி ஆசிரியராக நடித்திருக்கும் வைகை புயல் வடிவேலு படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும்  ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது. சுந்தர் சி மற்றும் வடிவேலு வெற்றி கூட்டணி என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள்.

நாயகியாக நடித்திருக்கும் கேத்ரின் தெரசா பள்ளி ஆசிரியராக துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்றோரு நாயகியாக வரும்  வாணி போஜன் படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.

மைம் கோபி, அருள்தாஸ், ஹரிஷ் பெராடி, காளை மற்றும்  பக்ஸ், முனீஷ்காந்த், சந்தான பாரதி, விச்சு  என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சத்யாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது.  இ.கிருஷ்ண மூர்த்தி ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

காமெடி ஒன்றை மட்டும்  மைய கருவாக  வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி  இரண்டரை மணி நேரம் எப்படி போகிறது, என்பதே தெரியாத வகையில் படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச்  சென்றிருக்கிறார்.

0 comments:

Pageviews