EMI திரை விமர்சனம்
நாயகன் சதாசிவம் சின்னராஜ், நாயகி சாய் தன்யாவை கண்டதும் காதல் கொள்கிறார். காதல் கணிந்து திருமணமாகி, இல்லற வாழ்க்கையை நல்லபடியாக நடத்தி வரும் நிலையில், திடீரென்று அவருக்கு வேலை இல்லாமல் போகிறது. இதனால் மாதம் வருமானம் இல்லாதவர், தான் வாங்கிய இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவைகளுக்கான மாத தவணை கட்டமுடியாமல் எப்படி திண்டாடுகிறார் என்பதையும், மாத தவணை என்ற மாயையில் மாட்டிக்கொள்பவர்களின் பரிதாப நிலையையும், ஜனரஞ்சகமான படமாகவும், மக்களுக்கான பாடமாகவும் சொல்வதே ‘EMI’.
இயக்குனர் மற்றும் கதாநாயகனாக இரட்டை பங்கு வகித்த சதாசிவம் சின்னராஜ் – அவர் நடிப்பும், எளிமையும் பாராட்டப்படுகின்றன.
சாய் தன்யா முக்கியமான பெண்கள் பார்வையை – காதலால் தோன்றும் நிதி அழுத்தத்தையும், நல்ல மனைவியாக நின்று கணவரை ஆதரிப்பதையும் வெளிப்படுத்துகிறாராம்.
பேரரசு, செந்தி குமாரி, பிளாக் பாண்டி, ஆதவன் போன்றோர் படத்தில் பல்டி மரியாதையாக இருந்தாலும், தங்கள் பங்கு செய்திருக்கிறார்கள்.
இசை, ஒளிப்பதிவு, தொகுப்பு எல்லாம் தேவையான அளவில் பங்களித்திருக்கின்றன.
நடுத்தர மக்களின் ஆசையை தூண்டி மாத தவணையில் கடன் வாங்க வைக்கும் தந்திரத்தில் சிக்கும் மக்களின் நிலையையும், அதன் பின் கட்ட முடியாமல் தவிக்கும் நிலையில் அவர்களின் குடும்பங்கள் படும் அவமானங்களையும், இ;ன்னல்களையும், சாட்சி கையெழுத்து போடும் நண்பர்களின் மனநிலையும் சிறப்பாக காட்சிப்படுத்தி அதில் காமெடி, காதல், சென்டிமெண்ட் கலந்து மக்களுக்கு மாத தவணையின் சிக்கல்களை புரிய வைப்பதிலும், அவசரப்பட்டு வாங்குவது அவசியம்தானா என்பதை அறிந்து யோசித்து வாங்க வேண்டும் என்பதை இயல்பாக சித்தரித்து இயக்கியுள்ளார் இயக்குனர் சதாசிவம் சின்னராஜ்.
0 comments:
Post a Comment