கிங்ஸ்டன் திரை விமர்சனம்

 

ஜி வி பிரகாஷ் நடிப்பில் அவருடைய 25 வது படமாக வெளிவந்த திரைப்படம் தான் கிங்ஸ்டன், தமிழக கடற்கரையோர நகரமான தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் அமையப்பெற்றிருக்கும் தூவத்தூர் மீனவ கிராமத்தில்,பல ஆண்டுகளாக கடலுக்குள் செல்லக்கூடாது என ஒரு நம்பிக்கை உள்ளது. இதனால், அந்த ஊர் மக்கள் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை செய்கிறார்கள். சில இளைஞர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களில் ஒருவரான நாயகன் ஜி.வி.பிரகாஷும், ஆரம்பத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டாலும், அதன் உண்மையான பின்னணியை அறிந்துக் கொண்டு அதில் இருந்து விலகுவதோடு, தனது கிராம மக்கள் இழந்த வாழ்வாதாரதை மீட்க முடிவு செய்கிறார். அதன்படி, மர்மம் சூழ்ந்த அந்த கடலுக்குள் சென்று பிரச்சனையை தீர்க்க நினைப்பவர், தனது நண்பர்களுடன் கடலுக்குள் செல்ல, அவர் உயிருடன் திரும்பினாரா ? அல்லது ஊர் நம்புவது போல் பிணமாக திரும்பினாரா? என்பதை ஃபேண்டஸியாக சொல்ல முயற்சித்திருப்பது தான்கிங்ஸ்டன்’.

 

ஜிவி பிரகாஷ் ஒரு மீனவ இளைஞனாக அற்புதமாக நடித்துள்ளார், தூத்துக்குடி ஸ்லாங்கை பரவசமாகப் பேசி இருக்கிறார். திவ்யபாரதி கதையின் இரண்டாம் பாதியில் முக்கியமான பாத்திரமாக இருந்தாலும்,  திவ்ய பாரதியின் கதாபாத்திரம் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது போல் உள்ளது.  அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி., பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், தனது வேலைப்பாட்டில் படம் முழுவதும் பிரமாண்டத்தைக் காட்டியிருக்கிறார். ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் சுமார் ரகம், ஆனால் பின்னணி இசையில் கதைக்கு தேவையான திகிலையும் பரபரப்பையும் கொடுத்திருக்கிறார். ஹாரர் படங்களின் ரகசியங்களை சரியாக புரிந்துகொண்டு, முதல் பாதியை தரையில், இரண்டாம் பாதியை கடலுக்குள் என வித்தியாசமான சூழல்களில் படம் நகரச் செய்திருக்கிறார் இயக்குனர். மேலும், கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன, இதனால் படத்தின் திரில்லையும், பயமும் அதிகரிக்கின்றன.


0 comments:

Pageviews