ஒத்த ஒட்டு முத்தையா விமர்சனம்

 

பழுத்த அனுபவம் மிக்க அரசியல்வாதியான முத்தையா தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டினை பெற்று தோல்வி அடைகிறார்.  அதன் பிறகு அந்தக் கட்சியை விட்டு வெளியேறி, சுயேசையாகப் போட்டியிடுகிறார். இதில் அவர் வெற்றி பெறுகிறாரா? இல்லையா? என்பது ஒரு புறமும்  மறுபுறத்தில் அவருடைய திருமணமாகாத மூன்று தங்கைகளுக்கும் மாமியார் தொல்லைகள் இல்லாத வகையில் ஒரே குடும்பத்தில் சகோதரராக இருக்கும் மூவரை திருமணம் செய்து வைக்க தீர்மானிக்கிறார். ஆனால் அவருடைய தங்கைகள் மூவரும் தங்களின் மனதை கவர்ந்த வெவ்வேறு ஆண்களை காதலிக்கிறார்கள். இவர்களின் திருமணம் அண்ணனின் விருப்பப்படி நடைபெற்றதா? அல்லது தங்கைகளின் விருப்பப்படி நடைபெற்றதா? என்பதும் இணைத்து சொல்லப்படுவது தான் இந்த 'ஒத்த ஒட்டு முத்தையா' படத்தின் கதை.


கவுண்டமணியின் முகத்தில் முதுமை தெரிந்தாலும் அவரால் சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை என்றாலும் அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. அதிலும் அரசியல் வசனங்களை நையாண்டித்தனத்துடன் பேசி ரசிகர்களை வசப்படுத்துகிறார். படம் முழுவதிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கவுண்டமணி பாணியிலான நகைச்சுவைகள் கொட்டி கிடக்கிறது. இருந்தாலும் உருவ கேலி தொடர்பான நகைச்சுவை மிகையாக இடம் பிடித்திருக்கிறது. இதை தவிர்த்து இருக்கலாம்.


படத்தின் கதையை மட்டுமல்ல படத்தையும் கவுண்டமணி தான் தாங்கி பிடித்திருக்கிறார். கவுண்டமணியை தவிர்த்து வேறு அனைத்து நடிகர்களும் இயக்குநர் சொன்னதை மட்டும் தான் செய்திருக்கிறார்கள்.

0 comments:

Pageviews