Mr House Keeping Movie Review

Mr house keeping is the Tamil film features a talented cast including Hari Baskar, Losliya, Ilavarasu, Sha Ra, and Rayan. Written and directed by Arun Ravichandran, the movie is produced by Thenandal Ramasamy and Nithin Manohar. The music for the film is composed by Osho Venkat, while the cinematography is handled by Kulothungavarman. The editing is done by Rama Subbu.M

The hero, Hari Bhaskar, an engineering college student, falls in love with the heroine Losliya, who studies in his college. But Losliya refuses to accept his love and then challenges him and falls in love with another girl. 
That girl also ends up marrying someone else.

Hari Bhaskar, who is unemployed after a few years, goes to House Keeping work in Losliya's home for emergency money. Due to the circumstances, Losliya's home has to work for 6 months of House Keeping. 
Losliya is friendly with him after some  understanding.

Hari Bhaskar Mistaking Losliya's friendship as love, he also develops a deep love. 
Meanwhile Losliya decides to marry her co-worker Ryan. 

லாஸ்லியாவின் நட்பை காதல் என்று தவறாக புரிந்துக் கொள்ளும் ஹரி பாஸ்கர், மனதுக்குள் காதல் வளர்த்துக்கொள்ளகிறார். இதனிடையே லாஸ்லியா தன்னுடன் வேலை பார்க்கும் ராயனை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கிறார். 

இதனையடுத்து ஹரி பாஸ்கர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார். இறுதியில் ஹரி பாஸ்கர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லையா? நாயகி லாஸ்லியா, ஹரி பாஸ்கர் காதலை ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதே ’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் யூடியூப் பிரபலம் ஹரி பாஸ்கருக்கு இது முதல்படம் போல இல்லாமல் இயல்பான நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார். காதல், நடனம், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என அனைத்திலும் கவனம் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்து அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறார். நல்ல கதைகளை தேர்வு செய்வதின் மூலம் தமிழ் சினிமாவில் நிச்சயம் முன்னணி நடிகையாக வளம் வருவார் .

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரயான் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.சாரா வரும் காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறார் . அப்பாவாக வரும் இளவரசு, நாயகனின் அம்மாவாக நடித்த நடிகை என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஓசோ வெங்கட்டின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக உள்ளது.

காதல் மற்றும் குடும்பம் இரண்டில் எது முக்கியம் என்பதை மையமாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் அருண் ரவிச்சந்திரன் படத்தின் முதல் பாதியில் காதல், காமெடி என எடுத்து செல்ல இரண்டாம் பாதி காதல் தோல்வி , குடும்பம் என அழகாக படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார்.

நடிகர்கள் : ஹரி பாஸ்கர், லாஸ்வியா, ரயான், இளவரசு, சாரா 
இசை : ஓஷோ வெங்கட்
இயக்கம்: அருண் ரவிச்சந்திரன்
mஅக்கல் தொடர்பு : விஜய் முரளி, S2 சதீஷ், கிளாமர் சத்யா

0 comments:

Pageviews