Identity Movie Review
.The hero Tovino is living as a single family with his two younger sisters. However, Tovino burns and kills a man who takes obscene pictures of a young woman changing clothes with a cell phone hidden there and threatens her with money.
After this, Trisha witnesses the incident. She gets into an accident within minutes of witnessing the incident.
Through Trisha, an eyewitness to the killer, police officer Vinay enlists the help of Tovino Thomas, who has the uncanny ability to spot criminals and paint them like they are.
Did Dovino help the police officer Vinay in the end? Isn't it?
Is Vinay related to the criminal who Tovino burned to death? Isn't it?
That is the rest of the story of 'Identity'.
ஹரன் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டோவினோ தாமஸ் முதல்பாதி அமைதியானவராகவும் இரண்டாம் பாதி அதிரடி நாயகனாக நடிப்பில் கவனம் பெறுகிறார்
நாயகியாக நடித்திருக்கும் த்ரிஷா விபத்தால் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்ட கதாபத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கதை அடுத்த கட்டத்திற்கு நகர துணை நிற்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் வினய் நல்லவரா கெட்டவரா என்று யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு வித்யாசமான கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தில் மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு பக்க பலமாக உள்ளது.
இன்றைய சமூகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு சஸ்பென்ஸ்,திரில்லர் கதையை யாரும் யூகிக்க முடியாத விதத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். அகில் பால் & அனஸ் கான் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனர்களுக்கு பாராட்டுக்கள்.
நடிகர்கள்: டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய்
இசை: ஜேக்ஸ் பிஜோய்
இயக்கம்: அகில் பால் & அனஸ் கான்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S2)
0 comments:
Post a Comment