பயாஸ்கோப் திரை விமர்சனம்
இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் படித்த பட்டதாரியும் கதையின் நாயகனுமான ராஜ்குமார் தனது பாசமிகு சித்தப்பாவின் ஆசீர்வாதத்துடன் கிராமத்தில் இருந்து கிளம்பி சென்னை வந்து சினிமாவை கற்றுக் கொள்கிறார். பிறகு படம் இயக்குவதற்கான வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளர்கள் அலுவலகம் ஏறி இறங்கிக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவரின் தாயார் தனது கணவனின் தம்பியின் ஜாதகத்தை எடுத்து ஊரில் சொல்வாக்கு மிக்க சாமியாரிடம் ஜாதகம் பார்க்கிறார். அதற்கு அந்த சாமியார் இந்த ஜாதகக்காரருக்கு நேரம் சரியில்லை அதனால் இனி பிச்சை எடுப்பார் என்று கூறுகிறார். மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட சித்தப்பா தற்கொலை செய்து கொள்கிறார். இதை அறிந்து கிராமத்திற்கு வந்து கதறி அழுகிறார் ராஜ்குமார். மூட நம்பிக்கையாலும் அறியாமையாலும் இப்படி தனது சித்தப்பா தற்கொலை கொண்டார் என்று எண்ணி வருந்துகிறார். அந்த சாமியார் ஒரு போலி சாமியார் என்றும் இனி இது போல் போலி சாமியார்களால் எந்த ஒரு உயிரும் போகக்கூடாது என்று எண்ணிய கதாநாயகன். தன் சித்தப்பாவின் கதையை ஒரு படமாக எடுத்து வெளியிட வேண்டும் என்று விரும்புகிறார். சினிமா பற்றி எதுவும் தெரியாத தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைக் கொண்டு படத்தை எடுக்க தொடங்கி, அதற்காக தனது வீட்டில் இருந்த ஆடு, மாடு என அனைத்தையும் விற்று படம் எடுக்கிறார்.இதனை அறிந்த சாமியார் தனது செல்வாக்கை பயன்படுத்தி அவருக்கு பல இன்னல்களை தருகிறார். ஒரு கட்டத்தில் கொலை முயற்சியும் நடக்கிறது. முடித்த படத்தை வெளியிட இன்னும் பல லட்சம் தேவைப்படுவதால், கடைசியில் குடும்பத்தின் வாழ்வாதார நிலத்தையும் விற்று படத்தை வெளியிட முயற்சிக்கும் தருவாயில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
கேமரா உள்ளிட்ட சினிமா படப்பிடிப்பு கருவிகளின் பெயர்கள் கூட தெரியாத மனிதர்களை வைத்துக்கொண்டு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்ததற்காகவே இயக்குநர் ராச்குமாரை பாராட்டியாக வேண்டும்
தான் படம் எடுத்த அனுபவத்தை ஒரு கதையாக எழுதி இயக்கியிருக்கும் சங்ககிரி ராச்குமார், தனது முதல் படத்தின் காட்சிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஒரு படமாக கொடுத்திருக்கிறார். முதல் படம் போலவே, கிராமத்து மனிதர்களை நடிக்க வைத்து எதார்த்தமான காட்சிகள் மூலம், இப்படியும் திரைப்படம் எடுக்கலாம் என்பதை உலகிற்கு சொல்லியிருப்பவர், வியாபாரம் என்று வந்துவிட்டால் நல்லது, கெட்டது என்பதெல்லாம் பார்க்க மாட்டார்கள், என்பதை மக்களுக்குச் சொல்லியிருப்பவர் தானும் உணர்ந்திருப்பார் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment