குடும்பஸ்தன் திரை விமர்சனம்

 

விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் மணிகண்டன் மாற்று சாதியை சேர்ந்த நாயகி  சான்வீ மேக்னாவை  காதலித்து இரு தரப்பு பெற்றோர்களின்  எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார்.

மாத சம்பளம் வாங்கி குடும்பத்தை கவனித்து வரும்  மணிகண்டன் சிறிய பிரச்சனை காரணமாக தனது வேலையை இழந்துவிடுகிறார். வேலை போன விஷயத்தை வீட்டில் சொல்லாமல்  மறைத்து விடுகிறார்.

இந்நிலையில் மணிகண்டன் வீட்டின் தேவைக்காக வெளியே வட்டிக்கு கடன் வாங்குகிறார்  இதனையடுத்து மணிகண்டனின் அக்கா கணவரான  குரு  சோமசுந்தரத்திற்கு மணிகண்டனுக்கு வேலை போன விஷயம் தெரிய வருகிறது. இறுதியில் குரு சோமசுந்தரம் மணிகண்டனுக்கு வேலை போன விஷயத்தை வெளியே சொன்னாரா? இல்லையா?  மணிகண்டனுக்கு வேலை கிடைத்ததா ? இல்லையா ? மணிகண்டன் கடன்  தொல்லையில் இருந்து மீண்டு வெளியே வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் மணிகண்டன் எதார்த்த நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார். பாத்ரூமில் அழுவதும் , மற்ரவர்களிடத்தில் கடன்  வாக்குவதாகட்டும் , வயிறில் இருக்கும்  குழந்தையிடம் பேசுவது என ஒவ்வொரு இடத்திலும் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சான்வி மேக்னா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். பணம் தான் முக்கியம் என்ற மனநிலையுடன் வாழும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்  குரு சோமசுந்தரம்

மணிகண்டனின் அப்பாவாக நடித்திருக்கும் ஆர்.சுந்தரராஜன், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் குடசனத் கனகம், நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் நிவேதிதா ராஜப்பன், மணிகண்டனின் முதலாளியாக நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், அனிருத் என் படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் வைசாக் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு உள்ளது. சுஜித் என்.சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு பட்த்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

காதல், குடும்பம், பணம், கடன் தொல்லை ஆகியவரை மைய புள்ளியாக வைத்து ஒரு முழு நீல நகைச்சுவை திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்  ராஜேஷ்வர் காளிசாமி இன்றைய சூழலில் குடும்பங்களின் மகிழ்ச்சி என்பது அந்த குடும்ப தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கையில்தான் உள்ளது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் குடும்பஸ்தன் குடும்பங்கள் கொண்டாடும்

0 comments:

Pageviews