எக்ஸ்ட்ரீம் திரை விமர்சனம்
கட்டுமான பணி நடக்கும் கட்டிடம் ஒன்றில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை அது இளம் பெண் அபி நட்சத்திரா என்பதை கண்டுபிடிக்கிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறைக்கு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்க, இறுதியில் கொலைக்கான பின்னணி என்ன ?, கொலையாளி யார் ? என்பதை பரபரப்பான கிரைம் திரைல்லராக மட்டும் இன்றி பெண்களுக்கான அறிவுரையாகவும் சொல்வதே ‘எக்ஸ்ட்ரீம்’.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சின்னத்திரை பிரபலம் ரச்சிதா மகாலட்சுமி, போலீஸ் உடையில் கம்பீரமாக இருக்கிறார். விஜயசாந்தி போல் அதிரடியான சண்டைக்காட்சிகள் இல்லை என்றாலும், ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் பெண் போலீஸ் கதாபாத்திரத்தை கவனமுடன் கையாண்டு நியாயம் சேர்த்திருக்கிறார். கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணாக நடித்திருக்கும் அபி நட்சத்திரா, சில பெண்கள் செய்யும் தவறால் பாதிக்கப்படும் அப்பாவி ஏழை பெண்களை பிரதிபலிக்கும்படி நடித்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜ்குமார் நாகராஜ், பார்ப்பதற்கு சீமான் போல் இருக்கிறார். போலீஸ் வேடம் மட்டும் அல்ல அரசியல்வாதி உள்ளிட்ட அனைத்து குணச்சித்திர வேடங்களுக்கும் சரியாக பொருந்தக்கூடிய முகம்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, பாடல்கள் ஆகியவை ஓகேதான்.
இதுபோன்ற துப்பு துலக்கும் குற்ற சம்பவங்கள் தொடர்பான கதையில் திரைக்கதையை சற்று விறுவிறுப்பாக அமைத்து விட்டால் பார்வையாளர்களை கவர முடியும். இதில் இயக்குநர் வெற்றியை பெற்றிருக்கிறார்.
0 comments:
Post a Comment