Ui திரை விமர்சனம்

 

கன்னட முன்னணி நடிகர் உபேந்திரா எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கிறார்.ஒன்றுக்கு இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.


படத்திலும் அவர் திரைப்பட இயக்குநர்.அவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை திரையரங்குகளில் பார்க்கும் சிலர் பித்துப் பிடித்தது போல் ஆகிறார்கள். சிலர் தைரியமான சில முடிவுகளை எடுக்கிறார்கள். இதனால், அந்தப் படத்தை ஒரு தரப்பு கொண்டாட, மற்றொரு தரப்பினர் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று போராடுகிறது. முன்னணி திரைப்பட விமர்சகர் அந்தப் படத்தை நான்கு முறை பார்த்த பிறகும் விமர்சனம் எழுத முடியாமல் திணறுகிறார். இதனால், அந்தப் படம் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொள்ள படத்தை இயக்கிய உபேந்திராவையே தேடிச் செல்கிறார். அந்தத் தேடலில் அவர் கண்டடைந்தது என்ன? என்பதுதான் திரைக்கதை.


சத்யா மற்றும் கல்கி பகவான் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் உபேந்திரா. ஒன்றில் மென்மை, இன்னொன்றில் மிரட்டல் என இரு இடங்களிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார். 


நாயகியாக ரீஷ்மா நானய்யா நாயகனை ஒரு தலையாக காதலிக்கும் இடங்கள் ரசனைக் களஞ்சியம். அழகான ஒரு ஆட்டமும் போடுகிறார். திரைப்பட விமர்சகராக முரளி சர்மா, உபேந்திரா தந்தையாக அச்யுத்குமார், பதவிக்கு தவமிருக்கும் ஓம் சாய் பிரகாஷ் கவனிக்கத்தக்க நடிப்பில் கவர்கிறார்கள்.


பி. அஜினீஷ் லோகநாத் இசையில் பாடல்கள் ரசிகர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன. ஒளிப்பதிவாளர் வேணுகோபால் தனது கேமரா மூலம் காட்சிகளில் மாயாஜாலம் நிகழ்த்தி இருக்கிறார். குபேந்திரா எழுதி இயக்கிஇருக்கிறார். நாட்டில் ஒழுங்கான சாலைகள் இல்லை. ஆனால் விண்வெளி ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து கோடிகளை ஒதுக்குவது, மக்களுக்கு போதிய உணவு இல்லை என்றாலும் ஆயுதங்களை வாங்கி குவிப்பது, இயற்கை வளங்கள் செல்வாக்கு பெற்றவர்களால் சூறையாடப்படுவது போன்றவற்றில் ஒரு குடிமகனின் கோபத்தையும் திரை மொழியாக விவரித்த விதத்தில் படம் முக்கியத்துவம் பெற்று விடுகிறது.

0 comments:

Pageviews