முஃபாசா தி லயன் கிங் திரை விமர்சனம்
வறட்சி காரணமாக குடும்பத்தோடு இடம்பெயரும் சிறுவன் முஃபாசா, மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குடும்பத்தை தொலைக்கிறது. முஃபாசாவை கண்டெடுக்கும் டாக்கா அவனை தன் நண்பனாக்கி கொள்கிறான். இருவரும் சேர்ந்தே வளர்ந்து வரும் நிலையில் கிரோஸ் என்ற வெள்ளை சிங்கமும் அதன் கூட்டாளிகளும் ஒவ்வொரு காடாக சென்று அங்குள்ள சிங்க அரசர்களை கொன்று வருகின்றன. இதனால் தான் வளர்ந்து வந்த இடத்திலிருந்து டாக்காவும், முஃபாசாவும் தப்பி ஓடுகிறார்கள். போகும் வழியில் அவர்களுக்கு சராபி என்ற பெண் சிங்கம், ரஃபிக்கி என்ற தீர்க்கதரிசனம் பெற்ற குரங்கு ஆகியவை பழக்கமாகின்றன. எல்லாரும் சேர்ந்து மிலேலே என்ற கனவு தேசத்தை நோக்கி பயணமாகின்றனர். பின்னால் கிரோஸ் மற்றும் வெள்ளை சிங்கள் அவர்களை துரத்தி வருகின்றன.
கிரோஸை முஃபாசா வென்றதா? மிலேலே கனவு தேசத்தை அடைந்தார்களா? முஃபாசா எப்படி அரசன் ஆனது என்பது அதிரடி ஆக்ஷனுடன் நல்ல கருத்துகளையும் சொல்லும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் ஆற்று வெள்ளம் முதல் இறுதிக் காட்சியில் நடைபெறும் சண்டை வரை கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் அசத்தல். உண்மையான சிங்கம் எது, கிராபிக்ஸ் சிங்கம் எது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது.
இந்தப் படத்தின் பெரிய ப்ளஸ் தமிழ் டப்பிங். மிக நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் தமிழ் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களுக்கு அர்ஜுன்தாஸ், அசோக்செல்வன், ரோபோ ஷங்கர், சிங்கம்புலி, விடிவி கணேஷ் ஆகிய கலைஞர்களின் வாய்ஸ் ஆக்டிங்கும் சுவாரஸ்யம். அனிமேஷன், விஎஃப்எக்ஸ் எல்லாம் எந்த குறையும் இல்லாமல் வந்திருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் தண்ணீருக்கு அடியில் வரும் பரபர அட்வென்ச்சர் காட்சிகளும் ஆக்ஷன் காட்சிகளும் கட்டிப்போடுகிறது.
’முஃபாசா : தி லயன் கிங்’ கண்டிப்பாக குழைந்தைகளோடு சென்று ரசித்துவிட்டு வரலாம்,
0 comments:
Post a Comment